நோய்களை விரட்டும் சுடுதண்ணீர் வைத்தியம்…

ஓடி ஆடி களைத்து விட்டு தாகத்திற்கு கம்மாய்களிலும், ஆறுகளிலும், குளங்களிலும் தண்ணீர் குடித்த தலைமுறையெல்லாம் காணாமல் போய்விட்டது. சமீபமாய், பம்ப் செட்டில் வயலுக்கு நீர் இறைத்து, அப்படியே முகம் கழுவி தண்ணீர் குடித்து தாகம் தீர்த்த கடைசி தலைமுறையும் நாம தான்.

ஓடி ஆடி களைத்து விட்டு தாகத்திற்கு கம்மாய்களிலும், ஆறுகளிலும், குளங்களிலும் தண்ணீர் குடித்த தலைமுறையெல்லாம் காணாமல் போய்விட்டது. சமீபமாய், பம்ப் செட்டில் வயலுக்கு நீர் இறைத்து, அப்படியே முகம் கழுவி தண்ணீர் குடித்து தாகம் தீர்த்த கடைசி தலைமுறையும் நாம தான். 

water

நமது வசதிக்காக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களின் பிடியில் இப்போது நாம் சிக்கி, அலுவலகமோ, வீடோ  தாகம் என்றாலே  ஃப்ரிட்ஜைத் திறந்து, ஜில்லின்னு பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பப்பட்ட நீரைக் குடிப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறோம். நம்மைப் பார்த்து வளரும் நம் பிள்ளைகள், நாம் குடிக்கும் நீருக்கு பதிலாக, ஜில்லின்னு குளிர்பானங்களைக் குடித்து பழக்கப்பட்டு வருகிறார்கள்.

ice water

குளிர்ந்த நீர்,நம் இதயத்திற்கு செல்லும் நரம்புகளில்  கொழுப்பை சேமித்து மாரடைப்பிற்கு வழிவகுக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியுமா? குளிர்ந்த நீரைப் பருகுவதால், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களும், பெருங்குடல் புற்றுநோய் போன்றவையும் அழையா விருந்தாளியாய் வருகிறது. இயற்கை முறையில் மண் பானைகளில் நிரப்பப்பட்ட நீரைப் பருகுவதால் இந்த மாதிரியான ஆபத்துக்கள் கிடையாது. ஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை. இன்று ஆரோக்கியத்தை விற்று தான் பணத்தை சம்பாதிக்கிறோம்.

hot water

சுடு தண்ணீர் குடித்து வருவதால் எண்ணற்ற பலன்கள் உண்டு. நல்ல உணவு பழக்கம் என்பது உணவுடன் சுடுநீர் பருகுவதையும் உள்ளடக்கியதே. உங்கள் குடும்பத்தினரையும் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுடுதண்ணீர் அருந்த பழக்கப்படுத்துங்கள். வெறும் வயிற்றில் நீர் பருகுவது ஆரம்ப நாட்களில் சிரமம் தான். ஆரம்பத்தில் ஒரு டம்ளர் சுடுநீரை அருந்தலாம். சிறிது, சிறிதாக அதிகப்படுத்தி  2டம்ளர் வரை பழக்கப்படுத்தலாம்.   

முக்கியமாக, சுடுநீரை பருகியவுடன் அடுத்த 45 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடவோ, காபி, டீ போன்றவைகளை அருந்தவோ கூடாது. அதன் பிறகு பாருங்கள்.. உங்கள் உடலிலும், மனதிலும் சுடுதண்ணீர் செய்கிற மாற்றங்களை.இளஞ்சூட்டில், வெறும் வயிற்றில் நீரை அருந்துவதால், இருமல், ஆஸ்துமா, தலைவலி, உடல் வலி, மூட்டுவலி குறைந்த மற்றும் உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பு, வலிப்பு, கண் மற்றும் காது , தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள், பசியின்மை, சிறுநீர்  சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தடுக்க வல்ல ஆற்றல் வாய்ந்தது.

hot water

தொடர்ந்து வெறும் வயிற்றில் சுடுநீரை அருந்தி வந்தால், இத்தனை நாட்களில் இந்த நோய்களுக்கான தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் இயற்கை வழி மருத்துவத்தை பயன்படுத்தி வருபவர்கள். 
3 நாட்களில் தலைவலி,10 நாட்களில்  பசியின்மை,காது , மூக்கு, தொண்டை , வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,15 நாட்களில் பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகள்,30 நாட்களில் இரத்த அழுத்தம் ,சர்க்கரை ,இதய நோய்கள்
மாதங்களில் ஆஸ்துமா, வலிப்பு நோய்கள்,4 மாதங்களில்  இரத்தத்தில் கொழுப்பின் அளவு…

எது எப்படியிருந்தாலும், நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். இதனால் வேறு எந்த பக்கவிளைவுகளும் இருக்கப் போவதில்லை. குளிர் காலம் துவங்க இருக்கும் நேரத்தில், இந்த சுடுநீர் வைத்தியத்தை ஆரம்பிப்பதற்கும் சரியான நேரமாக இருக்கும்.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....