Home லைப்ஸ்டைல் நைட்ல இந்த ஜூஸை மட்டும் குடிங்க; தொப்பை குறையுறத கண்கூடா பார்ப்பீங்க!?

நைட்ல இந்த ஜூஸை மட்டும் குடிங்க; தொப்பை குறையுறத கண்கூடா பார்ப்பீங்க!?

இன்றைய நவநாகரீக சூழலில் துரித உணவுகளின் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விளைவு ஒபிசிட்டி. உடல் எடையை சிலர் குறைக்கவும் சிலர் கூட்டவும்  படாதபாடு  படுகிறார்கள்.

இன்றைய நவநாகரீக சூழலில் துரித உணவுகளின் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விளைவு ஒபிசிட்டி. உடல் எடையை சிலர் குறைக்கவும் சிலர் கூட்டவும்  படாதபாடு  படுகிறார்கள். ஆனால்  நாம் இன்று பார்க்க இருப்பது உடல் எடையை குறைப்பதைப் பற்றி தான். சிலர் எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும், டயட் உணவை பின்பற்றினாலும் அவர்களுக்கு உடல் எடை குறையவே குறையாது. 

aloe

டயட் உணவுகள், உடற்பயிற்சிகளுக்குச் சிறந்த உணவு என்றால் அது  கற்றாழை தான். இந்த கற்றாழையானது   அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் பயன்படுகிறது. கற்றாழையைத்  தினமும் சாறு எடுத்து இரவில் குடித்து வர உடலில் மெட்டபாலிஸம் அதிகரிக்கிறது.  இது உடல் எடை குறைப்பிற்குப் பெரிதும் உதவுகிறது. கற்றாழையில்  கசப்பு சுவை உள்ளதால் இதை பெரும்பாலான நபர்கள் விரும்ப மாட்டார்கள். அதனால் இதைத்  தேன் கலந்து சாப்பிடலாம்.  கற்றாழை   செரிமான சக்தியை அதிகரிக்கும், குடல் பிரச்னைகள் உருவாகாமல் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக  வைத்திருக்கும். அப்படிப்பட்ட ஏராளமான சத்துக்கள்  நிறைந்த கற்றாழை  ஜூஸ் செய்வது எப்படி என்பதைக் காணலாம். 

தேவையானவை:

aloe

கற்றாழை   – 1 

தண்ணீர் – 2 கப்

செய்முறை:

கற்றாழையின் தோல் சீவி  உள்ளிருக்கும் சதையை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.  இந்த சதைப் பகுதியை மிக்ஸியில்  போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.  இதனை ஒரு க்ளாஸில் ஊற்றி ஃப்ரஷாக குடிக்கலாம். இப்படி அடிக்கடி இந்த கற்றாழை  ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறையும்.  வாரம் மூன்று முறை கற்றாழை  ஜூஸ் குடித்து வந்தால்  தொப்பை குறைவதுடன் உடல் எடை குறைவதைக் கண்கூடாகப் பார்க்க முடியும். என்ன கற்றாழை   ஜூஸ் குடிக்க கிளம்பியாச்சா?

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆர்டர் செய்ததோ மட்டன் பிரியாணி! வந்ததோ புழு பிரியாணி

சிந்தாமணியில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய மட்டன் பிரியாணியின் பூழு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட...

தமிழிசைக்கு புதுச்சேரி முதல்வராக ஆசை: நாராயணசாமி

புதுச்சேரி ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் அம்மாநிலத்திற்கு முதல்வராக ஆசைப்படுவதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு...

சட்டமன்ற தேர்தல்: அதிரடியாக செயல்படும் 112 குழுக்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்ந்து சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த 112 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
TopTamilNews