Home தமிழகம் நேற்று கபாலி, இன்றைக்கு கபாலி கான்! புத்தூர் கட்டு மாயம்!

நேற்று கபாலி, இன்றைக்கு கபாலி கான்! புத்தூர் கட்டு மாயம்!

என்கிட்ட போனை மட்டும் குடுங்க, கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு இப்பவே ஒரு வீடியோ போட்டுடுறேன், கைகாலை உடைச்சுடாதீங்க சாமி, ஊட்டிவிடவும் கழுவிவிடவும்கூட ஆளு இல்ல” என, கதற மன்னிப்பு வீடியோவை வெளியிட, இப்போதைக்கு மாவு கட்டிலிருந்து கபாலிகான் எஸ்கேப்!

வேலூரின் பிரபல ரவுடி கபாலி. நேற்றுவரை கபாலியாக இருந்தவரை  காவல்துறை இன்று கபாலி கானாக மாற்றி டம்மிபீஸாக்கிவிட்டிருக்கிறது. விஷயம் என்னன்னா, பி.எஸ்.என்.எல். ஊழியராக இருந்த கபாலியின் அடாவடி போக்கு காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டு, சும்மா இருக்க முடியாமல் ஏரியாவில் அடிக்கடி கம்பு சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறார். கபாலியின் அடாவடி பொறுக்காமல், அவரின் இரண்டாவது மனைவியும் அவரை விட்டுப் பிரிந்து சிங்கபூருக்கு சென்றுவிட்டார். விரக தாபத்தில் தவித்ததாலோ என்னவோ, மனைவியை உடனடியாக நாடு திரும்ப அழைத்திருக்கிறார். ரவுடியாக ஃபார்ம் ஆகிக்கொண்டிருக்கும்போது வாய்வார்த்தையில் அழைத்தால் மரியாதையாக இருக்குமா? கத்தி கம்போடு வீடியோ எடுத்து ‘நான் யார் தெரியுமா, வீசிடுவேன் வெட்டிடுவேன்’ என மிரட்டலோடு மனைவிக்கு வீடியோ ரெக்கார்ட் பண்ணி வாட்ஸப்பில் அனுப்பியிருக்கிறார்.

kabali seeking apology

வாட்ஸப்பில் எத்தனை பேருக்கு ஹெல்த் டிப்ஸ் மெசேஜ்களை ஃபார்வேர்ட் செய்திருப்பார் அவர் மனைவி. அந்த அனுபவத்தில் கணவன் தன்னை மிரட்டிய வீடியோவையும் வேலூர் காவலர்களுக்கு ஃபார்வேர்ட் செய்து பாதுகாப்பு கோரி சிங்கப்பூரில் இருந்து கோரிக்கை விடுக்க, கபாலியை அள்ளிப்போட்டுக்கொண்டு வந்துவிட்டது வேலூர் காவல்துறை. கைதின்போது கபாலியிடம் இருந்த டம்மி துப்பாக்கி, இரண்டு கத்திகள், ஐபேடு, 4 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது. ஆக, சார் பக்கா ப்ளானோடுதான் இருந்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்ட காவல்துறை, மேற்படி விசாரணைக்காக காவல்நிலைய கழிவறை பக்கம் கொஞ்சம் வரச்சொல்லவும் பேதியாகிவிட்டது கபாலிக்கு. “ஐயா, நான் சும்மா விளையாட்டுக்கு டிக் டாக் வீடியோ போட்டேங்கய்யா, என் பொண்டாட்டி அதை சீரியஸா எடுத்துகிட்டு உங்ககிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுச்சுங்கய்யா, நான் கபாலி எல்லாம் இல்லீங்கய்யா, கபாலி கான், சும்மா லோலாயிக்கி, இப்ப மட்டும் என்கிட்ட போனை மட்டும் குடுங்க, கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு இப்பவே ஒரு வீடியோ போட்டுடுறேன், கைகாலை உடைச்சுடாதீங்க சாமி, ஊட்டிவிடவும் கழுவிவிடவும்கூட ஆளு இல்ல” என, கதற மன்னிப்பு வீடியோவை வெளியிட, இப்போதைக்கு மாவு கட்டிலிருந்து கபாலிகான் எஸ்கேப்!

மாவட்ட செய்திகள்

Most Popular

விவசாயிகளை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார் – அமைச்சர் காமராஜ்

திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளை வைத்து அரசியல் செய்து வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர்...

இந்திய விமானப்படையின் முதல் பெண் கமாண்டர் காலமானார்!

இந்திய விமானப்படையின் முதல் பெண் கமாண்டர் விஜயலட்சுமி ரமணன் காலமானார். அவருக்கு வயது 96. 1924ஆம் ஆண்டு பிறந்த...

‘வெங்காயங்களை ரேஷன் கடையில் விற்க நடவடிக்கை’ – அமைச்சர் செல்லூர் ராஜு

விலை உயர்வால், வெங்காயங்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் பண்ணை பசுமைக்...

பூட்டிய வீட்டில் திருடியவரை, அயர்லாந்தில் இருந்து பிடித்துக்கொடுத்த உரிமையாளர்

சென்னை போரூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த நபரை, அயர்லாந்தில் இருந்த உறவினர் சிசிடிவி கேமரா மூலம் போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!