Home சினிமா நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்டர் ஒன்றை போனிகபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அடுத்தமாதம் ரீலிசாகவுள்ள இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

24

இந்நிலையில் இந்தப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என போனி கபூர் தனது டிவிட்டரில் இன்று காலை அறிவித்திருந்தார். கூடவே அஜித்தின் போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது கையில் சுத்தியலுடன் ஆக்ரோஷமாக அஜித் காட்சி தரும் படத்தினை வெளியிட்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை வெளியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். 

Most Popular

பைக் நிலை தடுமாறி விழுந்து விபத்து; ஒருவர் பரிதாப பலி!

திருப்பத்தூர் அருகே வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளகுட்டை பகுதியை சேர்ந்த பழனி(37). இவர் நேற்று காலை வழக்கம் போல...

‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’ தமிழகத்தில் நாளை முதல் துவக்கம்!

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. நாட்டின் எந்த மாநிலத்திலும்...

சூடுபிடிக்கும் 2ஜி வழக்கு – தோல்வி பயத்தில் திமுக

இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஊழல் வழக்கை வரும் அக்டோபர் 5 முதல் தினந்தோறும் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஒட்டுமொத்த திமுகவையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘’தேர்தல் நெருங்கும் நிலையில் மறுபடியுமா!’’...

5 இயக்குநர்களின் குறும்படங்கள் “புத்தம் புது காலை” ஓடிடியில் வெளியாகிறது!

தமிழில் 5 இயக்குநர்கள் இயக்கியுள்ள புத்தம் புது காலை என்ற 5 குறும்படங்கள் அமேசான் பிரைமில் வெளியாகிறது. சுஹாசினி மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்பராஜ்...
Do NOT follow this link or you will be banned from the site!