Home அரசியல் நேருவின் கால் தூசிக்கு கூட அவரு சமம் கிடையாது...... கொந்தளித்த திக்விஜய சிங்..... பதிலடி கொடுத்த பா.ஜ. தலைவர்....

நேருவின் கால் தூசிக்கு கூட அவரு சமம் கிடையாது…… கொந்தளித்த திக்விஜய சிங்….. பதிலடி கொடுத்த பா.ஜ. தலைவர்….

தன்னை நேருவின் கால் தூசிக்கு கூட சமம் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் கூறியதற்கு சிவராஜ் சிங் சவுகான் நான் ஒன்றும் ஒரு குடும்பத்தின் அடிமை இல்லை என பதிலடி கொடுத்தார்.

நேருவின் கால் தூசிக்கு கூட அவரு சமம் கிடையாது...... கொந்தளித்த திக்விஜய சிங்..... பதிலடி கொடுத்த பா.ஜ. தலைவர்....

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் நேரு ஒரு கிரிமனல்.  காஷ்மீருக்குள் நுழைந்த பாகிஸ்தான் படைகளை இந்திய ராணுவம் விரட்டி கொண்டு இருந்த போது போர் நிறுத்தத்தை அறிவித்து முதல் குற்றத்தை செய்தார். அடுத்து ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து இரண்டாவது குற்றத்தை செய்து விட்டார் என அதிரடியாக பேசி இருந்தார்.

சிவ்ராஜ் சிங் சவுகான்

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் ஒருபடி மேலே போய் சிவ்ராஜ் சிங் சவுகானை கடுமையாக சாடினார். நேருவின் கால் தூசிக்கு கூட சிவ்ராஜ் சிங் சவுகான் சமம் ஆகமாட்டார். அவர் வெட்கப்பட வேண்டும் என திக்விஜய சிங் கூறியிருந்தார். 

திக்விஜய சிங்

திக்விஜய சிங்குக்கு தற்போது சிவ்ராஜ் சிங் சவுகான் பதிலடி கொடுத்தார். நான் ஒன்றும் ஒரு குடும்பத்தின் அடிமை இல்லை. நான் பாரத தாயின் கால் தூசி. அவளுக்கு சேவை செய்வதிலேயே எனது வாழ்க்கையை செலவழிப்பேன் என்று சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார்.

நேருவின் கால் தூசிக்கு கூட அவரு சமம் கிடையாது...... கொந்தளித்த திக்விஜய சிங்..... பதிலடி கொடுத்த பா.ஜ. தலைவர்....
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தப்பியோட முயன்ற பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி… மாவுக்கட்டில் முடிந்த பரிதாபம்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி சி.டி.மணியுடன் காரில் வரும்போது அவர்களைக் கொல்லும் முயற்சி நடந்தது. கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது....

கருத்து வேறுபாட்டால் விபரீதம்… காதலியின் கழுத்தை கத்தியால் வெட்டி விட்டு, இளைஞர் தற்கொலை!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் கருத்து வேறுபாடு காரணமாக காதலியை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம்...

கிரிக்கெட் பந்து சைஸில் கருப்பு பூஞ்சை… மூளையிலிருந்து அகற்றிய மருத்துவர்கள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வந்தது. கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனாவின் தீவிரத்திலிருந்தே இன்னும் மக்கள்...

“சாக்கடையை ஏன் சுத்தம் செய்யவில்லை?” – ஒப்பந்ததாரரின் தலையில் குப்பையை கொட்டிய எம்எல்ஏ!

சாக்கடையைச் சுத்தம் செய்யாமல் தாமதப்படுத்தியதால் அதற்கானஒப்பந்ததாரரின் தலையில் குப்பைகளைக் கொட்டி சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபட்டிருக்கிறார் சிவசேனா எம்எல்ஏ திலீப் லண்டே. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து...
- Advertisment -
TopTamilNews