Home சினிமா `நேருக்கு நேர்’ முதல் `சூரரை போற்று’ வரை  `காப்பான் ’சூர்யாவின் கலக்கல் 22 வருஷ பயணம்!

`நேருக்கு நேர்’ முதல் `சூரரை போற்று’ வரை  `காப்பான் ’சூர்யாவின் கலக்கல் 22 வருஷ பயணம்!

தமிழ் திரையுலகில் தனது பயணத்தை சரவணனாக இருந்து நடிகர் சூர்யாவாக அவதாரம் எடுத்து இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றது.  எவர் க்ரீன் யூத்தான மார்கண்டேயர் நடிகர் சிவக்குமாரின் அனுபவங்கள் சூர்யாவின் திரையுலக அறிமுகத்திற்கு காஸ்ட்லியான விசிட்டிங் கார்டாக இருந்தாலும், அதன் பின்னர் பெரும் போட்டிகள் நிறைந்த இந்த கோடம்பாக்கத்தின் கோட்டைக் கதவை தனது கடின உழைப்பாலும், விடாத போராட்ட குணத்தினாலும் ஒவ்வொரு அங்குலமாய் தகர்த்தெறிந்து இன்று உச்ச நட்சத்திர அடையாளத்தை அடைந்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் தனது பயணத்தை சரவணனாக இருந்து நடிகர் சூர்யாவாக அவதாரம் எடுத்து இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றது.  எவர் க்ரீன் யூத்தான மார்கண்டேயர் நடிகர் சிவக்குமாரின் அனுபவங்கள் சூர்யாவின் திரையுலக அறிமுகத்திற்கு காஸ்ட்லியான விசிட்டிங் கார்டாக இருந்தாலும், அதன் பின்னர் பெரும் போட்டிகள் நிறைந்த இந்த கோடம்பாக்கத்தின் கோட்டைக் கதவை தனது கடின உழைப்பாலும், விடாத போராட்ட குணத்தினாலும் ஒவ்வொரு அங்குலமாய் தகர்த்தெறிந்து இன்று உச்ச நட்சத்திர அடையாளத்தை அடைந்திருக்கிறார். 

suriya

எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி -கமல் காலங்களில் நல்ல நடிப்பாற்றலையும், பெயர் சொல்லும் கதைகளிலும் நடித்திருந்தாலும் நடிகர் சிவக்குமார் முன்னணி நடிகராக இவர்களுடன் எந்த போட்டியிலுமே இருந்ததில்லை. சூர்யா நடிகராக அறிமுகமான காலக்கட்டம், கடும் போட்டிகள் நிறைந்த காலக்கட்டம். ரஜினி – கமல் ரசிகர்களின் யுத்தங்கள் எல்லாம் முடிவுற்று விஜய் -அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம். இன்னொரு பக்கம் தன் வித்தியாசமான நடிப்பாலும், கேரெக்டர்களுக்கான மெனக்கெடலிலும் விக்ரம் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருந்த சமயம் அது. 

suriya

 ஆரம்ப காலங்களில் இந்த போட்டிகளில் எல்லாம் பங்கெடுக்காமல்,   எவ்வித பதட்டமும் இல்லாமல் அடுத்தடுத்து ஆண்டுக்கு இரண்டு படங்கள் என நடித்துக் கொண்டிருந்தார் சூர்யா.
 காதல், குடும்பம், நட்பு என தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுக்கு முக்கியத்துவ்அம் கொடுத்து எல்லா கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தார். `மௌனம் பேசியதே’, `நந்தா’, ‘காக்க காக்க’ படங்கள் சூர்யாவிற்கு சினமா பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தன.
 

pithamagan

இந்த படங்களை அடுத்து இவருக்கு அமைந்த படங்கள் இவரின் திறமையை மீண்டும் புதுப்பித்தது. பிதாமகன், பேரழகன் படங்கள் நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு சூர்யாவை நகர்த்தி சென்றது. ஹீரோ என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும், இப்படித் தான் நடிப்பேன் என்கிற எவ்விதமான கட்டுபாடுகளையும் தனக்குள் கொள்ளாதவர். அதனாலேயே சூர்யாவை கொண்டாட ஒரு பெரும் கூட்டம் 90களில் கூடியது. தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய தடத்தை ஆழமாக பதித்தார்.
 அப்படி செய்யாமல் இருந்திருந்தால் சூர்யா இன்னொரு சிவக்குமாராக உருவாகியிருப்பார். நடிகர் சிவக்குமாருக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் சூர்யாவிற்கு ஏற்பட்டதில்லை. தன்னை ஒவ்வொரு அங்குலமாக செதுக்கி, தன்னுடைய சினிமா க்ராஃபை உயர்த்திக் கொண்டவர் சூர்யா. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றிப் போகும் நடிப்புத் திறமையால் திரையுலகை அவர் பக்கம் திருப்பினார். 

singam

‘வாரணம் ஆயிரம்’, 7-ம் அறிவு, ‘அயன்’, ‘சிங்கம்’ என அடுத்தடுத்த படங்களால் அன்றைய இளைஞர்கள் முனுமுனுக்கும் கதாநாயகனாக மாறினார். நாளுக்கு நாள் சூர்யவிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றது. தமிழ் திரையுலகில் கோலோச்சும் நடிகர்கள் பட்டியலில் தன்க்கான முத்திரையை பதித்தார்.
 திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார் சூர்யா. குறிப்பாக ஏழை எளிய மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
 தன்னுடைய சினிமா வாழ்வில் வெற்றி தோல்வி என இரண்டு புள்ளிகளையும் தன் திரைப்பயணத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே அழைத்து வந்துள்ளார். தோல்விகளை கண்டு துவண்டு போனதில்லை, வெற்றியை கண்டு வெறி கொண்டதில்லை. தன் பயனத்தை எப்படி தொடங்கினாரே அப்படியே ஒவ்வொரு படங்களிலும் அவர் பாடம் கற்று வருகிறார். ஆகவேதான் இவர் இயக்குநர்களின் நாயகன் என்றோம்.

suriya

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் `காப்பான்’ படத்தில் இன்னொரு சூர்யாவை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இதையடுத்து சூரரைப்போற்று படத்திலும் நடித்து வருகிறார். ஆகச்சிறந்த இந்த கலைஞனை சினிமாவும் கலை ரசிகர்களும் காலம் கடந்தும் கொண்டாடுவார்கள். ஏனெனில் கலை மக்களுக்கானது! மக்கள் கொண்டாடும் கலைஞர் சூர்யா.

மாவட்ட செய்திகள்

Most Popular

கவுதம நதியில் தீர்த்தவாரி கண்டருளிய அருணாச்சலேஸ்வரர்… திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

திருவண்ணாமலை மாசி மகத்தையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கவுதம நதியில் அருணாச்சலேஸ்ரர் சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்...

சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே எஞ்சியிருக்கிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அதிரடியாக களத்தில் இறங்கியிருக்கின்றன. அந்த...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்!

மக்கள் நீதி மய்யத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழ. கருப்பையா தன்னை இணைத்துக்கொண்டார். சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல்...

அதிமுகவிலிருந்து வெளியேறியது ஏன்? சரத்குமார் விளக்கம்!

சமகவை அழைத்து அதிமுக பேசும் என காத்திருந்தோம் என்று சரத்குமார் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமத்துவ...
TopTamilNews