Home தமிழகம் நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்பு!

நெல்லையில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்பு!

நெல்லை கல்லிடைக்குறிச்சியில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா மியூசியத்திலிருந்து மீட்கப்பட்டது. 

 சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் ஆஸ்திரேலியா வில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட தீவிர வேட்டையில் அந்த சிலை நெல்லையிலிருந்து கடத்தப்பட்டதென்று கண்டுபிடிக்கப்பட்டது.

pon

75.7 செ.மீ. உயரமுள்ள அந்த வெண்கலச் சிலையை 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓலிவர் போர்ஜ் அண்ட் பெரண்டன் லிங்க் நிறுவனத்திடம் இருந்து தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியகம் வாங்கி யிருந்தது. அது தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சிலை என ஆஸ்திரேலியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொன். மாணிக்கவேல் அந்த சிலையை மீட்டுள்ளார். ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி கொண்டுவரப்பட்ட நடராஜர்சிலை நாளை மறுநாள் சென்னை கொண்டு வரப்படுகிறது. 
 

- Advertisment -

மாவட்ட செய்திகள்

Most Popular

தர்மபுரி: தென்னங்கன்றுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த முதியவரால் பரபரப்பு

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் தென்னங்கன்றுடன் மனு அளிக்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டியை சேர்ந்த முதியவர் வெங்கடேஷன்(61) என்பவர், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.321 குறைவு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ. 312 குறைந்திருக்கிறது. பொதுமுடக்க காலத்தில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத...

தனி விமானத்தில் நண்பர்களுடன் மொரீஷியஸ் பயணம் : ஓபிஎஸ் மகனிடம் விசாரணை நடத்த உத்தரவு!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தனி விமானத்தில் வெளிநாடு சென்றது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா...

திண்டுக்கல்- “கோயம்பேட்டில் சுழற்சி முறையில் கடை ஒதுக்குக” – வியாபாரிகள் கோரிக்கை

திண்டுக்கல் திண்டுக்கல் நகரில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும்இருந்து 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு...
Do NOT follow this link or you will be banned from the site!