நெல்லையில் இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

தனியார் ஜவுளிக் கடையில் பணியாற்றி வந்த மெர்சி என்ற இளம்பெண்ணை, ரவி என்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை: தனியார் ஜவுளிக் கடையில் பணியாற்றி வந்த மெர்சி என்ற இளம்பெண்ணை, ரவி என்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இயங்கி வந்த தனியார் ஜவுளிக்கடையில், மெர்சி என்ற இளம்பெண் பணியாற்றி வந்தார். அவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ரவி என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணியளவில் பணி முடித்து திரும்பிய மெர்சியை வழிமறித்த ரவி, ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்த முக்கிய சாலையில் வைத்து கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நெல்லை போலீசார், படுகொலை செய்த ரவி என்ற வாலிபரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Most Popular

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

திருப்பதியில் சுமார் 7,000 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6...

இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி!

இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இலங்கையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 71 சதவிகித வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு நடந்த...