நெருங்கும் இடைத்தேர்தல்: பேருந்தில் வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்..!

இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் புகழேந்தியை ஆதரித்து விழுப்புரத்தை ஒட்டிய ஸ்டாலின் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அப்பகுதியில் தீவிரமா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் புகழேந்தியை ஆதரித்து விழுப்புரத்தை ஒட்டிய ஸ்டாலின் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

MK Stalin

இரு தொகுதிகளிலும் திண்ணையில் அமர்ந்தும், நடைப் பயணமாகச் சென்றும் அனைத்து வீடுகளிலும் வாக்கு சேகரித்தார். அப்போது மக்களின் குறைகளைக் கேட்ட மு.க. ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப் படும் என்று மக்களுக்கு உறுதியளித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள, உள்ளாட்சித் தேர்தலுக்காக எந்த ஒரு முன்னேற்பாடும் செய்யப் படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.  

MK Stalin

அதனைத் தொடர்ந்து, நடைப் பயணமாக வாக்கு சேகரித்துக் கொண்டே வந்த அவர், அவ்வழியே ஏழு செம்பொன் பகுதியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் ஏறி, பேருந்திலிருந்தவர்களிடம் குறைகளைக் கேட்டு வாக்கு சேகரித்துள்ளார். 

MK Stalin

 

Most Popular

“குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது” : எஸ்.வி. சேகரை கலாய்க்கும் தயாநிதி மாறன்

மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு...

கணவனை பிரிந்தார் ,பெற்ற குழந்தையை விற்றார் -மும்பை போகும் கனவில் ஒரு பெண் செய்த வேலைய பாருங்க

கிராமத்தில் வாழ விரும்பாத ஒரு பெண்,மும்பை போகும் ஆசையில்  தன்னுடைய கணவனை பிரிந்து ,பெற்ற குழந்தையை விற்ற போது பிடிபட்டார். ஹைதராபாத்தில் உள்ள ஹபீப்நகர் பகுதியில் 22 வயதான ஷேக் சோயா கான் என்ற...

இண்டர்வியூவை எளிதாக எதிர்கொள்ள உதவும் 10 விஷயங்கள்

கொரோனா நோய்த் தொற்றால் ஏராளமான வேலை இழப்புகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. 2020 டிசம்பருக்குள் கோடிக்கணக்கில் வேலை இழப்புகள் இருக்கும் என விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வேலை இழந்த ஒவ்வொருவருமே அடுத்த...

சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்

கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்தது, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோமோட்டோ கார்ப், டாடா ஸ்டீல் மற்றும் என்.டி.பி.சி. உள்பட பல்வேறு நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, அமெரிக்க டாலருக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!