நீ நேர்மையானவள்…நயன்தாராவை உருகவைக்கும் விக்னேஷ் சிவனின் காதல் பதிவு!

தனது காதலருடன் நியூயார்க்  பறந்துள்ள நயன் அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

நடிகர்களின் ஆளுமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியம். ஆனால், தான் அறிமுகமான நாளிலிருந்து தற்போது வரை உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா.

nayan

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நயன்தாரா தனது 35வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். தனது காதலருடன் நியூயார்க்  பறந்துள்ள நயன் அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

nayan

இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவரது காதலர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  நயன்தாராவுக்கு வாழ்த்து கூறியுள்ள அவர், நீ நேர்மையானவள் தைரியமானவள்,  வலிமையானவள், லட்சியமானவள், ஒழுக்கமானவள், நேர்மையானவள்,  கடின உழைப்பாளி, கடவுள் பக்தியும்  பயமும் உள்ளவள்.. நீ வாழ்க்கையில் இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும். உன்னுடன் வாழ்வின் சிறந்த தருணங்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எப்போது நீ  பிரமிப்பானவள்…என்று பதிவிட்டுள்ளார். 

விக்னேஷ் சிவனின்  இந்த வாழ்த்துக்கு  நயனின் ரசிகர்கள் சீக்கிரம் தலைவியை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...