Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் நீரிழிவு நோய்க்கு இந்தக்  காயை ட்ரை பண்ணிப் பார்த்திருக்கீங்களா!?

நீரிழிவு நோய்க்கு இந்தக்  காயை ட்ரை பண்ணிப் பார்த்திருக்கீங்களா!?

குழந்தையின் சுண்டு விரலளவே இருக்கும் அதலைக்காயை உப்புச்சேர்த்து வேகவைத்தோ,அல்லது மோரில் ஊறவைத்தோஎடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு,அதை வெய்யிலில் உலர்த்தி வைத்துக் கொண்டால் வருடம் முழுதும் இதை பயன் படுத்த முடியும்

நீரிழிவு நோய்க்கு இந்தக்  காயை ட்ரை பண்ணிப் பார்த்திருக்கீங்களா!?

நீரிழிவு நோய்க்கு இந்தக்  காயை ட்ரை பண்ணிப் பார்த்திருக்கீங்களா! இப்படி ஒரு காய் இருப்பதே பலருக்கும் தெரியாது!

அதலைக்காய்,தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ,குறிப்பாக மதுரை சிவகங்கை விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மக்கள் இதை நெடுங்காலமாக உணவில் சேர்த்து வந்துள்ளனர்.இதை யாரும் ஒரு பயிராக விளைவிப்பதில்லை! தானாக முளைத்து வேலிகளில் படர்ந்திருக்கும்.

athalakkai

ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் இவற்றை பறித்து வந்து விற்கிறார்கள்.இதன் தாவரவியல் பெயர் momordica cymbalaria என்பதாகும்.பாகலுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு கொடி இனம் இது.நீரிழிவு,குடல் புழு போன்றவற்றுக்கு அதலைக்காய் சிறந்த மருந்தாகும்.

இதன் சிறப்பே இதை உணவில் பலவகையில் சேர்த்துக்கொள்ள முடியும் என்பதே!குழந்தையின் சுண்டு விரலளவே இருக்கும் அதலைக்காயை உப்புச்சேர்த்து வேகவைத்தோ,அல்லது மோரில் ஊறவைத்தோஎடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு,அதை வெய்யிலில் உலர்த்தி வைத்துக் கொண்டால் வருடம் முழுதும் இதை பயன் படுத்த முடியும்.

தேவைப்படும் போது காயவைத்துள்ள அதலைக்காயை பொன் முறுவலாக வறுத்து, மோர்-அல்லது தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.பாகற்காய் காரக்குழம்பு செய்வது போல அதலைக்காய் காரக்குழம்பும் செய்யலாம்.இதன் கசப்புச்சுவைக்கு பழகிப்போன விருதுநகர் பகுதி மக்கள் அதலைக்காயை பொரியல் செய்தே சாப்பிடுகிறார்கள்.

bitter gourd

பெரும்பாலும் வரண்ட நிலத்திலேயே வளரும் அதலைக்காய் வெய்யில் அதிகமாகும்போது முற்றிலும் கருகிப்போய்விடும்.ஆனால் இந்தக் கொடியுடன் இனைந்து பூமிக்குள் மறைந்திருக்கும் அதலை கிழங்கு அப்போதும் அழியாமல் உயிருடன் இருக்கும்.மழை பெய்தவுடன் மறுபடியும் துளிர்த்து காய்விடத் தொடங்கிவிடும்.

இப்போதெல்லாம் இது சென்னை கே.கே.நகரிலேயே கிடைக்கிறதாம்!
மதுரை திருமங்கலம் மார்க்கெடில் கிலோ 20 ரூபாய்.சென்னை,கே.கே நகரில் கிலோ 100 ரூபாய்!

நீரிழிவு குடற்புழு ஆகிய நோய்களை தீர்ப்பதுடன் , தினமும் ஒரே மாதியான உணவுகளைச் சாப்பிட்டு போரடிக்கிறது என்று நினைப்பவர்களுக்கு இந்த புது சுவை புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.சீஸன்  நேரத்தில் வரத்து அதிகமாக இருக்கும் போது அன்றாட உணவுகளில் சேர்த்துக்கலாம்.

நீரிழிவு நோய்க்கு இந்தக்  காயை ட்ரை பண்ணிப் பார்த்திருக்கீங்களா!?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பாட்டன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் ஸ்பாட்டன்ஸ் அணி முதலில்...

முதல் டெஸ்ட் போட்டி- 2ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தம்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ்...

ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் கிணற்றில் குதித்த மகள்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று தாய் திட்டியதால் மனம் வெறுத்த 11ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

“அண்ணாமலையின் போராட்டம்- அரசியல் நாடகம்”

மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் தெரிவித்துள்ளார்.
- Advertisment -
TopTamilNews