Home இந்தியா நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை பரிதாப பலி!

நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை பரிதாப பலி!

109 மணி நேரத்துக்குப் பிறகு ஆழ்துளைக் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பஞ்சாப்: 109 மணி நேரத்துக்குப் பிறகு ஆழ்துளைக் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

baby

பஞ்சாப் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த 6ஆம் தேதி   பத்வீர் சிங் என்ற  2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்குத் துணியால் மூடப்பட்டிருந்த 150 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறுதலாகக் கால் வைத்த பத்வீர் உள்ளே சிக்கிக் கொண்டான். குழந்தையைக் காணாமல் தேடிய பெற்றோர். குழந்தை பத்வீர் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருப்பதைக்  கண்டுபிடித்தனர். 

bbay

இது குறித்த மீட்புப்படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில்  சம்பவ இடத்துக்கு வந்த அவர்களுடன்  ராணுவத்தினரும் சேர்ந்து கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு மேலாக குழந்தையை மீட்கப் போராடினர். ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே பள்ளம் தோண்டப்பட்டு, ஆழ்துளைக் கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.

pu njab

இந்நிலையில், 5 நாட்கள் கடும் போராட்டத்திற்குப் பின்னர், இன்று காலை 5.30 மணிக்கு  உயிருடன் மீட்கப்பட்டான். 140 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்குச் சாலை மூலமாகவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை பத்வீர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘அரசின் அறிவிப்புக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை’ – முதல்வர் திடீர் பேட்டி!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் கோரிக்கைகள் ஒன்றொன்றாக நிறைவேற்றப்படுகிறது. புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை...

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம் : முதல்வர் இரங்கல்!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இருக்கும் கூகூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அம்மாவட்டத்தின் இருவேறு இடங்களில் மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்கியதில், மதுரையை சேர்ந்த வீரர்...

உடலில் படுகாயங்கள்.. சீர்காழி அருகே இளம்பெண் மர்ம மரணம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கும் பெருந்தோட்டம் கிராமத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் கலையழகி(26). இவர் முதுகலை பட்டதாரி. இவரது தாய் தமிழ்செல்வி இன்று காலை, இவரை...

“சன்னி லியோன் புருஷன் மாதிரி ஆகலாம்னுதான் இப்படி செஞ்சேன்” -லக்கிக்கு ஆசைப்பட்டு சிக்கிய நபர் .

நடிகை சன்னி லியோனின் கணவரின் கார் நம்பரை அதிர்ஷ்டத்திற்காக பயன்படுத்திய ஒருவரை போலீசார் கைது செய்தார்கள் சன்னி லியோன் இந்திய...
TopTamilNews