நீட் தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் 48.57 % தேர்ச்சி; முதலிடத்தை பிடித்த ராஜஸ்தான் மாணவர்!?

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

neet

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட்  நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கெடுபிடிகளுக்குப் பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்த இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.  

nalin

இந்நிலையில் நீட்  தேர்வில், ராஜஸ்தானைச் சேர்ந்த நலின் கந்தேல்வால் என்பவர் அகில இந்திய  அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர்  720 மதிப்பெண்களுக்கு  701 மதிப்பெண் எடுத்து முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதையடுத்து இரண்டாவது இடத்தை டெல்லியைச் சேர்ந்த பாவிக் பன்சால் என்ற மாணவரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அக்‌ஷத் கவுஷிக் என்பவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

neet

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில், 48.57 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால்  முதல் 50 இடத்தில் தமிழக மாணவர்கள் யாரும் இடம்பெறவில்லை.  இருப்பினும் தமிழக மாணவியான ஸ்ருதி  என்பவர் 720 மதிப்பெண்களுக்கு 685 மதிப்பெண்கள் பெற்று 57 வது  இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டை விட  தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் தமிழக மாணவர்கள்  9.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

neet

நீட் தேர்வு முடிவுகளை http://www.nta.ac.in  , http://www.ntaneet.nic.in &nbsp ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....