Home சினிமா நீங்கள் என்றுமே எங்களுக்கு உத்வேகம் சார்; சிரஞ்சீவியை சந்தித்த ஆமிர் கான் நெகிழ்ச்சி

நீங்கள் என்றுமே எங்களுக்கு உத்வேகம் சார்; சிரஞ்சீவியை சந்தித்த ஆமிர் கான் நெகிழ்ச்சி

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதை அவரை மீண்டும் திரைத்துறைக்கு அழைத்து வந்தது. அந்த படம் மிகவும் பிடித்துப்போக, கைதி எண்.150 என்ற பெயரில் அதனை ரீமேக் செய்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அரசியலில் களம்கண்ட பின்பு நடிப்பதை நிறுத்திவிட்டார். 2007-ஆம் ஆண்டு வெளியான ‘சங்கர் தாதா சிந்தாபாத்’ படத்துக்கு பிறகு அவர் இரண்டே படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து போனார். அதுவும் அவரது மகன் ராம் சரண் நடித்த ‘மகதீரா’ மற்றும் ‘புரூஸ் தி பைட்டர்’ ஆகிய படங்களாகும்.

மகதீரா

maga

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதை அவரை மீண்டும் திரைத்துறைக்கு அழைத்து வந்தது. அந்த படம் மிகவும் பிடித்துப்போக, கைதி எண்.150 என்ற பெயரில் அதனை ரீமேக் செய்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

கைதி எண் 150

கைதி

அந்த திரைப்படம் சக்கபோடு போட, சைரா எனும் சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கைக் கதையில் நடித்து வருகிறார். இன்று வரும் இளம் நடிகர்கள் பலருக்கும் அவர் ரோல் மாடலாக இருக்கிறார், திரைத்துறை ஆளுமைகள் பலரும் அவரது நடிப்பை பாராட்டாமல். இந்நிலையில் ஷூட்டிங்காக ஜப்பான் சென்றிருந்த சிரஞ்சீவியை அங்கு வந்திருந்த ஆமிர் கான் சந்தித்திருக்கிறார்.

சைரா நரசிம்ம ரெட்டி

சைரா

இதுகுறித்து ஆமிர் கான் தனது டிவிட்டர் பக்கத்தில், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சிரஞ்சீவியை கியோடா விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்தது. என்ன இரு இன்ப அதிர்ச்சி, சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி கதையில் அவர் நடிப்பது பற்றி நீண்ட நேரம் விவாதித்தேன். நீங்கள் என்றுமே எங்களுக்கு உத்வேகம் சார் என பதிவிட்டுள்ளார்.

ஆமிர்

இந்த பதிவை சிரஞ்சீவி ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் ரீ-ட்வீட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

 

இதையும் வாசிங்க

ஜெயலலிதாவின் கடைசி 75 நாட்கள்; சர்ச்சையை கிளப்பும் சசி லலிதா திரைப்படம்?!

மாவட்ட செய்திகள்

Most Popular

மீண்டும் பொதுமுடக்கமா? தளர்வுகள் என்னென்ன? முதல்வர் ஆலோசனை!

நவம்பர் மாதத்திற்கு அங்கு ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில்...

“காட்டுக்குள் கடத்தி ,14 நாட்கள் அடைத்து …”கல்யாணத்திற்கு போன பெண் கதறல் .

ஒரு உறவினரின் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்ற பெண்ணை கடத்தி ஒரு காட்டுக்குள் அடைத்து 14 நாட்கள் பலாத்காரம் செய்தவரை போலீஸ் கைது...

பெரியார் பேரனுக்கு கொலைமிரட்டல்; இந்து பாரத் சேனா பிரமுகர் கைது

இந்து பாரத் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் மனோகரன். கோவை கள்ளப்பாளையத்தை சேர்ந்த இவர் தனது வாட்ஸ் அப் குழுவில் பெரியாருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் மழை நீரில் தத்தளிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நிவர் புயல் கடந்த சில நாட்களாக தமிழகத்தை புரட்டி போட்டு...
Do NOT follow this link or you will be banned from the site!