Home உலகம் நிலக்கரியை எரிக்காமல் மின்சாரம்...137 ஆண்டுகால வரலாற்றில் இங்கிலாந்தின் சாதனை

நிலக்கரியை எரிக்காமல் மின்சாரம்…137 ஆண்டுகால வரலாற்றில் இங்கிலாந்தின் சாதனை

லண்டன் நகரும் நமது டெல்லியை போல பல சுற்றுச்சூழல் சிக்கல்களை சந்தித்து வருகிறது.விக்டோரியா ராணி காலத்திலிதுந்து,அதாவது 1882ல் இருந்தே நிலக்கரியைத்தான் எரிசக்திக்கு பயன்படுத்தி வந்தது பிரிட்டன்.

லண்டன் நகரும் நமது டெல்லியை போல பல சுற்றுச்சூழல் சிக்கல்களை சந்தித்து வருகிறது.விக்டோரியா ராணி காலத்திலிதுந்து,அதாவது 1882ல் இருந்தே நிலக்கரியைத்தான் எரிசக்திக்கு பயன்படுத்தி வந்தது பிரிட்டன்.

coal

கடந்த மே ஒன்றாம் தேதி பிற்பகல் 1.24 மணிக்கு நிலக்கரியால் இயங்கும் கடைசி ஜெனரேட்டரை ஆஃப்.செய்துவிட்டது அந்த நாடு. தொழிற்புரட்சி நடந்த இரண்டாவது ஆண்டில் ஹால்பர்னில் நிலக்கரியை பயன் படுத்தி மின்னுற்பத்தி செய்ய துவங்கிய பிரிட்டன் இப்போதுதான் அதை நிறுத்தியிருக்கிறது. 

ஆனாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. வரும் 2025-க்குள் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திவிடுவோம் என்று.அறிவித்திருக்கிறார்கள்.இங்கிலாந்தின் பிஸ்னஸ் செகரடரியான கிரெக் கிளார்க் ‘கார்பன் கழிவை வெளியிடாத உலகின் முன்னனி பொருளாதார சக்தியாக இங்கிலாந்து புதிய பாதையில் முதலடி வைக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார். 

coal

ஆனால்,சூரிய மின்சக்தி,காற்றாலை மின்னுற்பத்தி சாதனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வாட் வரியை குறைக்காமல் அரசு 2025-ல் ‘நோ கார்பன்’ இலக்கை அடைய முடியாது என்றும் பத்திரிகைகள் எழுதி இருக்கின்றன.

உலகலவில் அதிகம் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நாடுகளில் முன்னணியில் இருக்கும் அமெரிக்கா,சீனா,இந்தியா,ரஷ்யா,ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த பாதைக்குத் திரும்புவது இந்த நூற்றாண்டுக்குள் நடக்கும் என்பதே சந்தேகமாக இருக்கும் நிலையில் இங்கிலாந்தின் இந்த முனெடுப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான்!

மாவட்ட செய்திகள்

Most Popular

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதியானது!

2021 சட்டப்பேரவை தேர்தல் வரும், ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,...

ஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

ஈரோடு ஈரோட்டில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு குமலன்குட்டை கணபதி நகரைச்...

சசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்!

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக வருகிற 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது. முதல்வர் இன்று டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை...

எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில்...
Do NOT follow this link or you will be banned from the site!