Home இந்தியா நித்தி ஆசிரமத்தில் பெண் மர்மச்சாவு...! அதிர வைக்கும் சம்பவம்!

நித்தி ஆசிரமத்தில் பெண் மர்மச்சாவு…! அதிர வைக்கும் சம்பவம்!

இந்த வழக்கானது பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் தற்போது வரை  நடைபெற்று வருகிறது

நித்தி ஆசிரமத்தில் பெண் மர்மச்சாவு...! அதிர வைக்கும் சம்பவம்!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுணன். இவருக்கு  ஜான்சிராணி என்ற மனைவியும் விஜி மற்றும் சங்கீதா என்ற இரு மகள்களும் உள்ளனர். விஜி மஞ்சள் காமாலை நோயினால் கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்தார். 

nithiya

இதையடுத்து மன உளைச்சல் அடைந்த சங்கீதா கடந்த அதே ஆண்டு பெங்களூரு நித்தியானந்தா தியான வகுப்பில் சேர்ந்தார். ஆனால் அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து பெங்களூரு ராம் நகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த வழக்கானது பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் தற்போது வரை  நடைபெற்று வருகிறது. இதனிடையே அர்ஜுணனும் இறந்துவிட மகள்கள் மற்றும் கணவனைப் பறிகொடுத்த சோகத்தில் இருக்கிறார் ஜான்சிராணி. 

ttn

இந்நிலையில், நித்தியானந்தா ஆசிரமத்தில் மகள் மர்மமான முறையில் இறந்தது குறித்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. இதனால் வழக்கை  சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்  என்று சங்கீதாவின் தாயார் ஜான்சிராணி கோரிக்கை விடுத்துள்ளார்.

nithi

இதுகுறித்து பிரபல ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நித்தியானந்தா ஆசிரமத்தில் குழந்தைகள் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொல்லப்படுகிறார்கள். அவர்களை மீட்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

நித்தி ஆசிரமத்தில் பெண் மர்மச்சாவு...! அதிர வைக்கும் சம்பவம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சசிகலாவை தரக்குறைவாக பேசுவதா? நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மை எரிப்பு

சசிகலாவை தரக்குறைவாக பேசியதாகக் கூறி, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை அமமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?- புகழேந்தி

மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய...

’’ஆளும்கட்சிக்கு பிடிக்காத வசனம் இதுதான்’’

இன்று தொடங்கிய 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்”

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்...
- Advertisment -
TopTamilNews