Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் நிஜமாவே சிகரெட்டை நிறுத்தணும்கிற ஆசை மனசுல இருந்தா மட்டும் இதப்படிங்க!

நிஜமாவே சிகரெட்டை நிறுத்தணும்கிற ஆசை மனசுல இருந்தா மட்டும் இதப்படிங்க!

சித்திரமும் கைப்பழக்கம் டீக்கடைய பாத்தா சிகரெட் பழக்கம்னு காலேஜ் படிக்கும்போது சும்மா சீனுக்காக பசங்கெல்லாம் சேர்ந்து சிகரெட் பழக்கத்தை ஆரம்பிச்சோம். ஆனா, இப்பவும் ஏன் சிகரெட் பிடிக்கிறேன்னு எனக்கே தெரியலை, சனியனை விடணும்னு பாக்குறேன், விக்ரமாதித்தனோட வேதாளம் மாதிரி இது பாக்கெட்ல ஏறி உட்கார்ந்துகிட்டு போகவே மாட்டேங்குது!

“காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் சமதளமான டேபிள் அல்லது தரையில், சிகரெட்டை நட்டகுத்தலா நிறுத்தி வச்சா, நிக்கப்போவுது” என சிகரெட் பிடிப்பவர்களின் வேதனை தெரியாமல் பேச வேண்டாமே ப்ரோ! சித்திரமும் கைப்பழக்கம் டீக்கடைய பாத்தா சிகரெட் பழக்கம்னு காலேஜ்  படிக்கும்போது சும்மா சீனுக்காக பசங்கெல்லாம் சேர்ந்து சிகரெட் பழக்கத்தை ஆரம்பிச்சோம். ஆனா, இப்பவும் ஏன் சிகரெட் பிடிக்கிறேன்னு எனக்கே தெரியலை, சனியனை விடணும்னு பாக்குறேன், விக்ரமாதித்தனோட வேதாளம் மாதிரி இது பாக்கெட்ல ஏறி உட்கார்ந்துகிட்டு போகவே மாட்டேங்குது என ஃபீல் பண்ணும் நண்பர்களே, சிகரெட்டை நிறுத்த சில எளிய வழிமுறைகள் என்னன்னு இணையத்தில் தேடித்துழாவி உங்களுக்காகவே  இந்த கட்டுரையை கொண்டுவருகிறோம். நிஜமாவே சிகரெட்டை விடணும்கிற எண்ணம் இருக்கிறவங்க, கையில இருக்குற சிகரெட்டை ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு உதட்டுக்கு கொண்டுபோகாம, படிங்க.

Quit Smoking

1. “இனிமேல் சிகரெட் புடிக்க மாட்டேன்னு என் தலையில அடிச்சு சத்தியம் பண்ணு”ன்னு காதலி கேட்டால், டமால்னு தலையில அடிச்சுடாதீங்க. அது அவ்வளவு சுலபம் இல்லை. படிப்படியா குறைப்பதுதான் சரியான வழி. நாளொன்றுக்கு பத்துன்னு இருந்தா, அதை எட்டுன்னு ஒரு எட்டு நாளைக்கி குறைச்சுட்டு வாங்க. அப்புறம் படிப்படியா குறைக்கலாம்.

2. இந்த‌ எண்ணம் வரும்போது, அதுக்குப் பதிலா நிக்கோட்டின் சூயிங் கம் வாங்கி மெல்ல பழகுங்க.

3. இதற்கான தேவை எழுந்தவுடனேயே, உங்ககிட்டயே இந்த கேள்விய கேளுங்க. “இப்ப என்ன மனாவுக்கு சிகரெட் புடிக்கணும்”? உலகில் 100 கோடி பேர் சிகரெட் பிடிக்கிறார்கள். எல்லாருக்கும் ஒரு காரணம். ஆனால், இப்ப சிகரெட் பிடிச்சா என்ன அதிசயம் நடந்துடபோகுது, பிடிக்காட்டி என்ன குடியா முழுகிட போகுதுன்ற கேள்வி உங்களுக்குள்ளே பத்துக்கு ஒரு தடவை எழுந்தா, அதுவும்கூட நல்லதுதான்.

4. கை சும்மா இருந்தாதான் பரபரன்னு இருக்கும், சிகரெட்டை தேடும். அதுனால, எப்பவுமே கைக்கு ஏதாவது வேலை குடுத்துக்கிட்டே இருங்க (கை வேலைன்ன உடனே ஏன் குறுகுறுன்னு பாக்குறீங்க, நாட்டிபாய்).  

5. வாய் நம்மளுடையதுங்கிறதுக்காக, எல்லா இடத்திலும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லையே? இனிமேல் கார்ல போகும்போது இல்ல வீட்ல இருக்கும்போது பிடிக்க மாட்டேன்னு ஒவ்வொரு இடமா குறைச்சுக்கிட்டு வாங்க. ஆபீஸ் வாசல்ல இருக்குற டீக்கடையில நின்னு  பிடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிகிட்டீங்கன்னா, பாதி கிணத்தை தாண்டுன மாதிரி.

6. ஒரு சிகரெட்டை பிடிக்கும்போது, விரல் சுடுகிற வரைக்கும் கடைசி இழுப்பு வரைக்கும் கொண்டுபோகவேண்டாம். நாலு அல்லது அஞ்சாவது இழுப்போட தூக்கிப்போட்டுடுங்க. தூக்கிப்போட்டுட்டு அடுத்த சிகரெட்டை பத்தவச்சுடாதீங்க. 

7. இந்த‌ எண்ணம் உங்களுக்கு வராம இருந்தாகூட, நண்பன்ற பேர்ல கூடவே ஒண்ணை ரொம்ப வருஷமா கட்டிக்கிட்டு அழுவோம் பாருங்க. சிகரெட்டைவிட அந்த ஏழரை ரொம்ப டேமேஜ். என்ன பண்ணனுமோ அது உங்க சாய்ஸ்.

8. கடைசியா ஒரு சென்ட்டிமென்ட் அட்டாக். உங்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தால், ஒவ்வொரு தடவையும் சிகரெட்டை உதட்டில் வைக்கும்போது, இந்த ஒரு சிகரெட் இழுப்பு என் ஆசை மகனுக்காக, இது என் மகளுக்காக என மனசுல நினைச்சுக்கங்க. பக்குன்னு இருக்கா? அப்போ அதான் வேணும்.

கட்டுரையை படிச்ச முடிச்ச உடனே, இதான்டா என்னோட கடைசி சிகரெட்னு தூக்கிப் போட்டுடாதீங்க. அப்புறம் இவ்ளோ நீட்டிமுழக்குனத்துக்கு அர்த்தமே இல்லாமபோயிடும். ஏதாவது ஒண்ணை முயற்சி பண்ணிப்பாருங்க. முழுசா சிகரெட்டை நிறுத்தமுடியாவிட்டாலும், பாதியா குறைச்சுதுக்கு இந்த கட்டுரைதான் காரணம்னு நினைச்சீங்கன்னா, மறக்காம கமென்ட் பண்ணுங்க, எங்க பேஜை ஃபாலோ பண்ணுங்க.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews