நாளை என்னடைய நண்பர்கள் இந்தியர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை! – டெல்லி ஜாமியா பல்கலை மாணவியின் கதறல்!

டெல்லி ஜாமியா பல்கலைக் கழகம் ஜனவரி 5ம் தேதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் எங்கும் பாதுகாப்பு இல்லை, என்னுடைய நண்பர்கள் நாளை இந்தியர்களாக இருப்பார்களா என்றே தெரியவில்லை என்று ஜாமியா பல்கலைக் கழக மாணவிகள் கதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்தது. டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

டெல்லி ஜாமியா பல்கலைக் கழகம் ஜனவரி 5ம் தேதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் எங்கும் பாதுகாப்பு இல்லை, என்னுடைய நண்பர்கள் நாளை இந்தியர்களாக இருப்பார்களா என்றே தெரியவில்லை என்று ஜாமியா பல்கலைக் கழக மாணவிகள் கதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

delhi college

தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்தது. டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் வன்முறை ஏற்படவே, போலீசார் தடியடி நடத்தினர். பல்கலைக் கழகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்து கண்ணில் பட்ட மாணவர்களை எல்லாம் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜாமியா பல்கலைக் கழகம் 2020 ஜனவரி 5ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹாஸ்டலிலில் இருந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர். வெளியேறும் மாணவிகளிடம் தொலைக்காட்சி நிறுவனங்கள் பேட்டி அளித்தன. அவர்கள் கண்ணீருடன் அளித்த பேட்டியில், “மாணவர்களுக்கு டெல்லி மிகவும் ஏற்ற, பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று நினைத்தோம். பல்கலைக் கழகம் உள்ளே யாரும் வர முடியாது என்று நினைத்தோம். ஆனால், நாங்கள் நினைத்ததற்கு மாறாக நடந்துள்ளது. இரவு முழுவதும் கதறினோம். இந்த நாடு முழுக்க பாதுகாப்பானதாக தெரியவில்லை. எங்கே செல்வது என்று தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள் எல்லாம் நாளை இந்தியர்களாக இருப்பார்களா என்றும் தெரியவில்லை. நான் இஸ்லாமிய பெண் இல்லை. ஆனாலும் முன்னிலைப்படுத்தப்படுகிறேன். எது சரியானதோ அதற்கு ஆதரவாக நிற்கக்கூட முடியாது என்றால் நம்முடைய கல்வியின் பயன் என்ன?” என்று கேட்டுள்ளார்.

delhi protest

பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய போலீசார், 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். அவர்களை திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணி வரை காவலில் வைத்திருந்து பிறகு விடுதலை செய்துள்ளனர். போலீஸ் தரப்பிலோ, “வன்முறையாளர்கள் பல்கலைக் கழக வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்து எங்கள் மீது கற்களை வீசியதால் நாங்களும் சென்றோம். வன்முறைக்கு காரணம் என்ன என்று ஆய்வு செய்து வருகிறோம்” என்கின்றனர்.

Most Popular

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும்...

வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..

மேற்கு டெல்லியில் இரண்டு நாட்களுக்கு(ஆகஸ்ட்- 4) முன்பு 12 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் (டி.சி.டபிள்யூ) வியாழக்கிழமை டெல்லி போலீசாருக்கு...

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...