Home தமிழகம் 'நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்' புத்தகம் வெளியானது: 8 ஆயிரம் பிரதிகள் விற்பனை!

‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ புத்தகம் வெளியானது: 8 ஆயிரம் பிரதிகள் விற்பனை!

‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் 8 ஆயிரம் புத்தகங்களும், 1 லட்சம் பிடிஎஃப் பிரதிகளும் விற்றுள்ளன.

சென்னை: ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் 8 ஆயிரம் புத்தகங்களும், 1 லட்சம் பிடிஎஃப் பிரதிகளும் விற்றுள்ளன.

ரஃபேல் முறைகேடு

rafale

மத்திய பாஜக அரசு மீது ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் எழுத்தாளர்  எஸ்.விஜயன் எழுதியுள்ள நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் எனும் புத்தகத்தைப் பத்திரிகையாளரும், இந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதி மீறல்

rafale

ஆனால் இதையறிந்த,  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள, பாரதி புத்தகாலயத்தில், ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தேர்தல் நடத்தை விதி மீறல் என்று கூறி  புத்தகத்தின் 146 பிரதிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இன்று புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்றும் கடிதம் அளித்திருந்த நிலையில், தேனாம்பேட்டை போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். 

தடை இல்லை

satya

இந்த விவகாரம் குறித்துப் பதிலளித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ, ‘புத்தகத்தை தேர்தல் ஆணையம் தடை செய்யவில்லை. இது குறித்து  விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார். 

 8 ஆயிரம் புத்தகங்கள் விற்பனை 

ram

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையிலுள்ள பாரதி புத்தகாலயம் அலுவலகத்தில் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகம் வெளியான சிலமணிநேரங்களில், 8 ஆயிரம் புத்தகங்கள்  விற்று தீர்ந்தன. மேலும் 10 ஆயிரம் புத்தகத்திற்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகும். இப்புத்தகம்  ரூ.15 க்கு கிடைக்கும் நிலையில்,  இலவசமாக பிடிஎஃப் பிரதியையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதுவரை 1 லட்சம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் காலமானார்!

மாவட்ட செய்திகள்

Most Popular

இளைஞரிடம் கத்திமுனையில் நகை, பணம் வழிப்பறி- பெங்களூரை சேர்ந்த 4 பேர் கைது

திருநெல்வேலி நெல்லை அருகே இளைஞரிடம் கத்திமுனையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற பெங்களூரை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

‘சும்மா ஆக்டிங்’ தடுப்பூசி போட்டுக் கொள்வது போல நடித்த அதிகாரிகள்: அதிர்ச்சியூட்டும் வீடியோ!

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி...

பப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை!

பப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.

டாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

தமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதும், உரிய ரசீது வழங்காததும் வாடிக்கையாகி விட்டது. இதனை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு...
Do NOT follow this link or you will be banned from the site!