Home சினிமா நாடு திரும்பிய பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகினுக்கு உற்சாக வரவேற்பு!

நாடு திரும்பிய பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகினுக்கு உற்சாக வரவேற்பு!

முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். 

பிக் பாஸ் சீசன் 3 டைட்டில்  வின்னர் முகின் நாடு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு மலேசிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். 

mugen

பிக் பாஸ்  3  நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இறுதி போட்டிக்கு 4 பேர் தேர்வான நிலையில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். 

mugen

 

மலேசியாவை  சேர்ந்த முகின் பாடல் பாடுவது, கலைநயமிக்க பொருட்கள் செய்வது என ஆரம்பத்தில் உற்சாகமாகக் காணப்பட்டார்.  போட்டியாளர்கள் தங்களை பற்றி அனைவர் மத்தியிலும் கூறிய போது, முகின்  சிறுவயதிலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறி அனைவரையும்  சோகத்தில் ஆழ்த்தினார். இதனால் அபிராமியின் அன்பை பெற்ற முகின்  அதனால் சில சங்கடங்களுக்கும்  ஆளானார்.

 

mugen

இருப்பினும் சக போட்டியாளர்களின் உந்துதலால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்ற  முகின், இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் டிக்கெட் டு பினாலே போட்டியில் கடுமையாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார். டிக்கெட் டு  பினாலே  மூலம் இறுதி போட்டிக்கு சென்றவர்கள் இறுதி போட்டியில் வெற்றிபெற மாட்டார்கள் என்ற நிலை கடந்த சீசன்களிலும் இருந்தது. இருப்பினும் அதை உடைத்து இம்முறை முகின்  பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னர் ஆனார்.

இந்நிலையில் முகின்  மீண்டும் மலேசியாவிற்கு திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு மலேசிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஒரு கிலோ சிக்கன் 5 பைசா! பழைய பைசா யாரிடமும் இருக்காது என்று அறிவித்த கடைக்காரர் அதிர்ச்சி!

ஐந்து பைசாவுக்கு திண்டுக்கல்லில் பிரியாணி கொடுத்து அசத்தியபோலவே, ஐந்து பைசாவுக்கு ஒரு கிலோ சிக்கன் இறைச்சி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் மதுரை கடைக்காரர். பொதுவாக...

“பெத்தவங்களோடு தூங்கும் போதே தூக்கிட்டு போய்ட்டிங்களே ” எட்டு வயது பெண்ணுக்கு நேர்ந்த நிலை.

ஒரு எட்டு வயது சிறுமி தன்னுடைய பெற்றோரின் அருகிலே தூங்கும் போதே, பலர் அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவம்...

தமிழகத்தில் திறக்கப்பட்ட 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பு !

புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிப்படை சான்றிதழ்களை தேசிய மருத்துவ ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை சமர்ப்பித்துள்ளது. தேசிய மருத்துவ...

“சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை” : 11 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்!

தமிழகத்தில் 11 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம்...
Do NOT follow this link or you will be banned from the site!