Home அரசியல் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்போம்: அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்போம்: அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடுவோம் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடுவோம் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ் , ‘முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பதை வரவேற்கிறோம். ஆர்.எஸ். பாரதி தொடுத்த வழக்கில் முகாந்திரம் உள்ளது என்றும், அதைத் தமிழகத்தில் உள்ள ஊழல் பிரிவு விசாரித்தால் உண்மை வெளி வராது. எனவேதான், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளார்கள். எனவே, இந்தச் சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் அல்லது ஆளுநர் அவரைப் பதவி நீக்கம்செய்ய வேண்டும். இது, தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம்’ என்று கூறியுள்ளார். 

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது,  ‘நிச்சயமாக நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடுவோம்’ என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் காலவரையற்ற ஸ்டிரைக்.. டாக்சி யூனியன்கள் மிரட்டல்

விவசாயிகளின் கோரிக்கைகளை 2 நாட்களுக்குள் நிறைவேற்றவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய அரசுககு டெல்லி என்.சி.ஆர். டாக்சி யூனியன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேற்கு வங்கத்தில் பெற்றோர்களின் சடலடத்துடன் வீட்டுக்குள் பல நாட்கள் வசித்த பெண்… பக்கத்து வீட்டினர் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் ஒரு பெண் தனது இறந்து போன பெற்றோர்களின் சடலத்துடன் பல நாட்கள் வசித்து வந்த சம்பவம் அண்டை வீட்டார்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம் முதல்வரின் விருப்பம்…. ஜோதிராதித்ய சிந்தியா தகவல்

மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் விருப்பம் என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் காலியாக இருந்த 28 சட்டப்பேரவை...

5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.. நிதின் கட்கரி தகவல்

குறு, சிறு மற்றும் நடுத்த நிறுவனங்கள் துறையில் மட்டும் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!