நாங்க ஆதரவும் கொடுப்போம்! முட்டுக்கட்டையும் போடுவோம்…..குடியுரிமை மசோதாவுக்கு செக் வைத்த உத்தவ் தாக்கரே

குடியுரிமை (திருத்த) மசோதா குறித்த எங்களது கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைத்தால் மட்டுமே மாநிலங்களவையில் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம் என சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்றுமுன்தினம் குடியுரிமை (திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக திங்கட்கிழமை காலையில் வெளியான சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாமனாவில், குடியுரிமை (திருத்த) மசோதா கண்ணுக்கு தெரியாத பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என அந்த கட்சி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. ஆனால் நாடாளுமன்ற மக்களவையில் அன்று சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் குடியுரிமை (திருத்த) மசோதாவுக்கு ஆதரவு அளித்தார்.

சிவ சேனா

குடியுரிமை (திருத்த) மசோதாவை இன்று மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது. மக்களவையில்  ஆதரவு அளித்த சிவ சேனா தற்போது மசோதா தொடர்பான எங்க கேள்விகளுக்கு பதில் கிடைத்தால்தான்  மாநிலங்களவையில் ஆதரவு கொடுப்போம் என திடீரென முரண்டு பிடித்துள்ளது. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே இது குறித்து கூறியதாவது:

குடியுரிமை மசோதாவுக்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு

அந்த அகதிகள் எங்கு…. எந்த மாநிலத்தில் தங்குவார்கள் என்பது உள்பட மக்களவையில் குடியுரிமை (திருத்த) மசோதா தொடர்பாக நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் கிடைத்தால் மட்டுமே மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம். இந்த மசோதா தொடர்பான விரிவான ஆலோசனை மற்றும் விவாதம் அவசியம். மசோதாக்களை நிறைவேற்றுவதை காட்டிலும், பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை மற்றும் வாழ்வின செலவின அதிகரித்து வருவது குறிப்பாக வெங்காய விலை உயர்வு ஆகியவற்றை குறித்து மோடி அரசு கவலைப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Most Popular

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...

சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பெரும்பாலும் தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பாதக்கப்படுகின்றனர். குறிப்பாக காவலர்களும் மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கொரோனாவால் எளிதில் பாதிப்படைகின்றனர். இதனிடையே நலத்திட்ட...

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

சென்னை, செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (பெயர் மாற்றம்). லாரி டிரைவர். இவர் குடும்பத்தினரோடு கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் கும்பலாக சிலர் வந்துள்ளனர். அவர்கள் பிரகாஷின்...