Home அரசியல் நாங்குநேரி இடைத்தேர்தல்... காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் குஷ்பு..!

நாங்குநேரி இடைத்தேர்தல்… காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் குஷ்பு..!

கடந்த மக்களவ தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் சீட் கொடுக்காததால் இடைத்தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது. 30-ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்தது. வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குவதால் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.kushboo

ஆளும்கட்சியான அ.தி.மு.க. இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தி.மு.க. விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் நாங்குநேரியில் போட்டியிடுகிறது. இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க-தி.மு.க. கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கட்சியிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. இன்றும், நாளையும் விருப்பமனுக்களை பெறுகிறது. அந்த கட்சி நாளை வேட்பாளர்களை அறிவிக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் 24-ம் தேதி அறிவிக்கப்படுகிறார். நேர்காணல் நடத்தி வேட்பாளரை தேர்வு செய்கிறது. நாங்குநேரியில் அ.தி.மு.க. -காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட முக்கிய நிர்வாகிகள் பலரும் விரும்புகின்றனர்.kumari anandhan

அ.தி.மு.க.வில் முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ்பாண்டியன், பிரபாகரன், நெல்லை புறநகர் மாவட்ட பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், செயலாளர் நடராஜன், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் காபிரியேல் ஜெபராஜன், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், இட்ட மொழி ஊராட்சி முன்னாள் தலைவர் டென்சிங், ஆர்.எஸ்.முருகன், பாப்புலர் முத்தையா, ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு வாய்ப்புகள் அதிகம்.kushboo

காங்கிரசில் மூத்த தலைவர் குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம். சிவகுமார், வி.பி.துரை, வக்கீல் காமராஜ், தமிழ் செல்வன், முரளி ராஜா, மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ஊர்வசி அமிர்தராஜ், மோகன் குமார ராஜா ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர். குஷ்பு இந்தத் தொகுயில் போட்டியிட விரும்புவதாகவு  தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் கடந்த மக்களவ தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் சீட் கொடுக்காததால் இடைத்தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் – மருத்துவர்கள் கண்காணிப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், தற்போது பெரிதும் கவலைப்படும்படியாக ஏதும்...

தனித்து போட்டியிட முடிவெடுத்துவிட்ட காங்கிரஸ்!

இத்தனை காலமும் புதுச்சேரியில் கிரண்பேடியோடு போராடி வரும் முதல்வர் நாராயணசாமிக்கு இப்போது புதிய தலைவலியாக வந்திருக்கிறார் ஜெகத்ரட்சகன். புதுச்சேரியின்...

தனியார் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை முயற்சி… பெண் பலியான சோகம்…

பெரம்பலூர் பெரம்பலூர் தனியார் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் அடுத்த...

பேரறிவாளன் விடுதலை – மீண்டும் குட்டையை குழப்பும் மத்திய அரசு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரும் வழக்கில் இன்று...
Do NOT follow this link or you will be banned from the site!