நாங்கதான் இன்னும் 50 வருஷத்துக்கு ஆட்சியில் இருப்போம்: பா.ஜ.க. துணை முதல்வர் தகவல்

உத்தர பிரதேசத்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.தான் ஆட்சியில் இருக்கும் என அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.

பிரயக்ராஜில் ராம்லீலா கமிட்டியின் மேகசின் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட உத்தர பிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பேசுகையில் கூறியதாவது: உத்தர பிரதேசம் மற்றும் மத்தியில் உள்ள அரசாங்கங்கள் நாட்டு மக்களுக்காக பணியாற்றுகிறது. இந்த அரசாங்கம் அடுத்த 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். ஆகையால் அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க விரும்பினால் இன்னும் 50 ஆண்டுகள் கழித்தே அதனை செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ்

கடந்த சில தினங்களுக்கு முன் சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், வரும் நாட்களில் நாம் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளோம். சமாஜ்வாடி குடும்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. 2022ல் நாம் உறுதியாக ஆட்சி அமைப்போம் என தெரிவித்தார்.

பா.ஜ.க.

அகிலேஷ் யாதவின் அந்த பேச்சை குறிப்பிட்டுதான் உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கிண்டல் செய்துள்ளார். பா.ஜ.க.வின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக உத்தர பிரதேசம் விளங்குகிறது. கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....