Home ஆன்மிகம் நவராத்திரி விழாவின்போது கொலு படிகளை எவ்வாறு அமைக்கவேண்டும் ? 

நவராத்திரி விழாவின்போது கொலு படிகளை எவ்வாறு அமைக்கவேண்டும் ? 

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் வீட்டில் வைக்கப்படும் 9 படிகள் கொண்ட கொலு மேடையில் எவ்வாறு கொலு படிகளை அமைக்கவேண்டும் என்பதினை பற்றி இந்த பதிவில் பார்போம். 

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

நவராத்திரி பூஜையின் பொழுது ஒன்பது படிகள் அமைப்பது மரபு ஆகும் .ஒவ்வொரு படியிலும் நம் முன்னோர்களின் கலாச்சாரத்தினை பறை சாற்றுகின்ற வகையில்  பொம்மைகளை அமைக்க வேண்டும். 

goluhjkk

பொம்மைகளை வைக்கும் மரபையும், அந்த பொம்மைகள் கூறும் தத்துவத்தையும் பற்றி பார்போம்.நவராத்திரியின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது  கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது ஒன்பது படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது ஆகும்.

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே  தேவி புராணத்தில் கூறி இருப்பதாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றது. 

goluhjkk

நவராத்திரியில் வீட்டில் வைக்கப்படும் கொலு மேடையானது, 9 படிகள் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக நம் கண் முன்னே எடுத்துரைக்கின்றது.

முதலாம் படி :

 கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.

இரண்டாம் படி :

 அடுத்ததாக அமைந்த இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற உயிர்களின் பொம்மைகளில் கொலுவில் வைக்க வேண்டும்.

மூன்றாம் படி :

 மூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.

நான்காம் படி :

நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.

navraaththiri

ஐந்தாம் படி :

ஐந்தறிவு கொண்ட உயிர்களான மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.

ஆறாம் படி :

 இந்த படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.

ஏழாம் படி:

 மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.

எட்டாம் படி :

தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளைக் கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.

ஒன்பதாம் படி :

 பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம் ஆகும் .

மாவட்ட செய்திகள்

Most Popular

அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

திண்டுக்கல் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி திண்டுக்கல்...
Do NOT follow this link or you will be banned from the site!