Home தமிழகம் நவம்பர் 1, தமிழ்நாடு தினம் : அரசாணை வெளியீடு..

நவம்பர் 1, தமிழ்நாடு தினம் : அரசாணை வெளியீடு..

1956ல் பிரிந்து சென்ற மாநிலங்கள், தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாட்களைத் தனது மாநிலங்களின் தினமாகக் கொண்டாடி வருகின்றன.

63 வருடங்களுக்கு முன்னர் ஒன்றாக இணைந்திருந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் பிரிந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டன. 1956ல் பிரிந்து சென்ற மாநிலங்கள், தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாட்களைத் தனது மாநிலங்களின் தினமாகக் கொண்டாடி வருகின்றன. அதனையடுத்து, நவம்பர் 1 ஆம் தேதி தமிழகம் உருவானதால் அந்த தினத்தைத் தமிழ் நாடு தினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

Tamilnadu

கடந்த ஜூலை மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1 ஆம் தேதி தமிழக தினமாகக் கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். அதன் படி, இதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தினத்தைக் கொண்டாடத் தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கியதுள்ளது

மாவட்ட செய்திகள்

Most Popular

மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியின் இயல்பான மரணத்தை விரும்புகிறோம்.. ஜனாதிபதி ஆட்சி தேவையில்லை.. பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் இயல்பான மரணத்தை விரும்புகிறோம், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதை விரும்பவில்லை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பட்டாச்சார்யா தெரிவித்தார். மேற்கு...

கே.சந்திரசேகர் ராவுக்கு வேறுவழியில்லை…. பரம எதிரியான பா.ஜ.க. அல்லது ஓவைசி கட்சியுடன் கூட்டணி

ஹைதராபாத் மாநகராட்சி மேயர் பதவி வேண்டுமானால் பரம எதிரியான பா.ஜ.க. அல்லது ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைத்தே தீர வேண்டும் என்று நிலைக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின்...

ராஜஸ்தானில் கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சம் பேரிடம் அபராதம் வசூலித்த போலீசார்

ராஜஸ்தானில் கடந்த 8 மாதங்களில், மாஸ்க் அணிவது உள்ளிட்ட கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடம் அபராதமாக மொத்தம் ரூ.14 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில...

70 வயதிலும் ஓய்வு காலத்தை விவசாயத்தில் செலவிடும் கேரள தம்பதியினர்.. வாரம் ரூ.45 ஆயிரம் வரை வருமானம்

கேரளாவை சேர்ந்த அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற தம்பதியினர் தங்களது ஓய்வு காலத்தை விவசாயத்தில் செலவிடுகின்றனர். இதன் வாயிலாக வாரத்துக்கு ரூ.45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகின்றனர்.
Do NOT follow this link or you will be banned from the site!