நல்லவர்கள் கொஞ்சம் நேர்மையாக பேசிவிட்டால் அவர்களின் வாயில் சுடுகிறார்கள்: கமல் ஹாசன் அதிரடி பேச்சு!

பாஜகவின் பி டீம் என்ற கெட்ட வார்த்தையால் சிலர் தங்களைத் திட்டுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

நெல்லை: பாஜகவின் பி டீம் என்ற கெட்ட வார்த்தையால் சிலர் தங்களைத் திட்டுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி நெல்லையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் எதிரே உள்ள பெல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட அக்கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

kamal hasan

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கமல் ஹாசன் பேசும் போது, ‘நல்லவர்கள் கொஞ்சம் நேர்மையாகபேசிவிட்டால் அவர்களின் வாயில் சுடுகிறார்கள். தமிழகத்தைச் சிலர் கொல்லைப்புறமாக்க நினைக்கின்றனர். இந்தியாவின் தலைவாசலாகத் தமிழகம் மாறும் நாள் வரும். தேர்தலை மனதில் வைத்தே 60 லட்சம் குடும்பங்களுக்கு 2,000 சிறப்பு நிதி வழங்கப்படுகிறது’ என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ மக்கள் நீதி மய்யத்தை பாஜகவின் பி டீம் என்ற கெட்டவார்த்தையில் சிலர் விமர்சிக்கின்றனர். தாங்கள் யாருக்கும் பி டீம் இல்லை, அப்படி எங்களைச் சொல்லக் கூடாது. உண்மையில் சொல்ல போனால் நாங்கள் தமிழகத்தின் A டீம் தான். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு யார் A டீம், யார் B டீம் என்று தெரியவரும். கோடி கோடியாய் சம்பாதித்தாலும் சாகும் போது அந்த சொத்து கூட வராது. நேர்மையாகவோ அல்லது சுரண்டியோ எத்தனை கோடி சம்பாதித்தாலும் அந்த பணம் மருத்துவமனையில் கிடக்கும் போது கூட வராது. உண்மையில் யார் வருவார்கள் தெரியுமா? அவர்கள் கவனிக்காமல் விட்ட அடிமட்ட தொண்டர்கள் தான் கூட வருவார்கள்’ என்று மறைமுகமாக அதிமுக, திமுகவைச் சாடினார்.

‘தமிழகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடாத ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான். மக்கள் நலனே மய்யத்தின் கொள்கை, தமிழர்கள் இழந்த மாண்பை மீட்டெடுப்போம், சாதி களைவோம், சமத்துவம் காப்போம்’ என்று கூறினார்.

முன்னதாக அரசியலில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....