நம் நாட்டில் உலகிலேயே விலை உயர்ந்த சாக்லேட் அறிமுகம்! விலையை கேட்டு மட்டும் அதிர்ச்சி அடையாதீங்க!

ஐ.டி.சி. நிறுவனம் நம் நாட்டில் உலகிலேயே விலை உயர்ந்த சாக்லேட்டை அறிமுகம் செய்துள்ளது. சாக்லேட் பாக்ஸ் (1 கிலோ) விலை ரூ.4.3 லட்சம் மட்டுமே என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐ.டி.சி. நிறுவனம் ஐ.டி.சி. பாபெல்லே என்ற பிராண்ட் பெயரில் உயர் ரக சாக்லெட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பாபெல்லே பிராண்ட் சாக்லேட் சுவை மற்றும் தரத்தில் சிறப்பாக இருப்பதால் அதை வாங்கி சுவைப்பதற்கென ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. ஐ.டி.சி. பாபெல்லே நிறுவனம் தற்போது உலகிலேயே விலை உயர்ந்த சாக்லேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

உலகின் விலை உயர்ந்த சாக்லேட்

தீபாவளி பண்டிகை கருத்தில் கொண்டு ஐ.டி.சி. பாபெல்லே Fabelle Trinity – Truffles Extraordinaire என்ற உலகின் மிகவும் விலை உயர்ந்த சாக்லேட்டை அறிமுகம் செய்துள்ளது. ஒரு கிலோ சாக்கெட் விலை ரூ.4.3 லட்சமாம். மேலும் ஆர்டர் செய்தால் மட்டுமே இந்த சாக்லெட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என ஐ.டி.சி. நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கின்னஸ் சாதனை

Fabelle Trinity – Truffles Extraordinaire சாக்லேட், உலகின் விலை உயர்ந்த சாக்லேட் என கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இந்த சாக்லேட் குறித்து ஐ.டி.சி. நிறுவனத்தின் உணவு பிரிவு தலைமை செயல் அதிகாரி அனுஜ் ருஷ்டகி கூறுகையில், உலகின் மிக விலையுயர்ந்த சாக்லேட் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்பதை உலகுக்கு உணர்த்துவதே இதன் குறிக்கோள் என தெரிவித்தார்.

Most Popular

பொய்யின் குப்பைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.. பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் குப்பைகள் இல்லாத இந்தியா என்னும் தூய்மை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். சுதந்திர தினம் வரை ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் நடைபெறும் குப்பை இல்லாத இந்தியா...

ராமர் கோயில் பூமி பூஜைக்கு குடியரசு தலைவரையும் மோடி அழைத்திருக்க வேண்டும்.. மாயாவதி திடீர் குற்றச்சாட்டு

அயோத்தியில் கடந்த 5ம் தேதியன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அடிக்கல்லையும் நாட்டினார். இந்த விழாவுக்கு குடியரசு தலைவரையும் பிரதமர் மோடி அழைத்திருக்க வேண்டும்...

லாக்டவுனால் செருப்பு விற்பனை சுமாரு.. ரூ.101 கோடி நஷ்டத்தை சந்தித்த பாட்டா

பிரபல காலணிகள் தயாரிப்பு நிறுவனமான பாட்டா இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் பாட்டா இந்தியா நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.100.88 கோடி...

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைன்னு சொன்னாங்க.. ஆனால் பதவிக்கு வந்ததும் மோடி மறந்து விட்டார்.. காங்கிரஸ்

நம் நாட்டின் பாரம்பரிய மிக்க அரசியல் கட்சியான காங்கிரசின் ஒரு பிரிவான இந்திய இளைஞர் காங்கிரசின் நிறுவிய தினம் நேற்று. தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் இந்திய இளைஞர் காங்கிரஸ் நிறுவன தினத்தில் இளைஞரணி...