நமீதாவை ஏமாற்றிய பிக் பாஸ்: 2 சீசன்கள் கழித்து உண்மையை உடைத்த கணவர்!

ஒல்லியான உருவம், உயரம், கவர்ச்சி என முதல் படத்திலேயே ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.

நடிகை நமீதாவுக்கு பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து அவரது கணவர் வீரா பகிர்ந்துள்ளார். 

‘மச்சான்’ என்ற மந்திர வார்த்தையால் தமிழ் மக்களின் உள்ளத்தைத் தொட்டவர் நடிகை நமீதா. குஜராத் மாநிலம் சூரத் இறக்குமதியான நமீதா ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

namitha

ஒல்லியான உருவம், உயரம், கவர்ச்சி என முதல் படத்திலேயே ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட பல படங்களில் நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அதனால் தான் குஷ்பூவை தொடர்ந்து நடிகை நமீதாவுக்கும் கோயில் கட்டி அழகு பார்த்தார்கள் அவரது ரசிகர்கள். 

namitha

இருப்பினும் சமீபத்தில் பிக் பாஸில் போட்டியாளராகப் பங்கேற்றதால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது.  இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு  தனது நீண்டநாள் காதலரான வீராவை திருமணம்  செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நமீதா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

namitha

இந்நிலையில் நமீதாவும் அவருடைய கணவரையும் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது நமீதா குறித்த ரகசியத்தை உடைத்த அவரது  கணவர், நமீதா எல்லா விஷயத்திலும் சுத்தம் பார்ப்பார் என்பது அனைவர்க்கும் தெரியும். ஆனால்  அவர்  பல் துலக்குவதில் ரொம்ப சோம்பேறி. அதனால் எலக்ட்ரானிக் தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்துவார். பிக் பாஸ் வீட்டில் கூட அதை பயன்படுத்தினார். 10 நாட்களுக்கு பிறகு அந்த எலக்ட்ரானிக் தானியங்கி இயந்திரத்தில் பேட்டரி இல்லாமல் போனதால் அவர் மீண்டும் பிக் பாஸிடம் அதை கேட்டுள்ளார். ஆனால்  கடைசி வரை பேட்டரி தராமல் பிக் பாஸ் ஏமாற்றிவிட்டார்’ என்று தெரிவித்துள்ளார். 

 

Most Popular

திருவள்ளூரில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. கொரோனா வைரஸ்...

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் சென்னை கிரைம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தந்தை மகன் கொலை விவகாரத்தில்...

எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசை இருந்தால் அதை அதிமுக அரசு நிறைவேற்றும் : அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

மும்மொழிக்கொள்கைக்கு கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படும் என்று பலரும் நினைத்திருந்த நிலையில் முதல்வர் எட்பாடி மும்மொழிக்கொள்கைக்கு பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து...

10ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் குழப்பம்! – விசாரணை நடத்தும் பள்ளிக் கல்வித் துறை

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில், இது பற்றி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில்...
Do NOT follow this link or you will be banned from the site!