Home சினிமா நன்றி சொன்ன ஷங்கர்; எதற்கு தெரியுமா?

நன்றி சொன்ன ஷங்கர்; எதற்கு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தை பார்த்து ரசித்து ஊக்குவித்த ரசிகர்களுக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தை பார்த்து ரசித்து ஊக்குவித்த ரசிகர்களுக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இயக்குநர் ஷங்கர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘2.0 படத்தை பார்த்து ரசித்து ஊக்குவித்த ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. படத்திற்கு ஆதரவு அளித்த ஊடகங்களுக்கும், தங்கள் குழுவின் கடின உழைப்பை மதித்தவர்களுக்கும் நன்றி. 2.0 படத்துக்காக தங்களது வாழ்வின் ஒரு பகுதியை அற்பணித்த படக்குழுவுக்கு மிக்க நன்றி’ என தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

கோவை: சிறுமியை திருமணம் செய்த உறவினர், கடத்தி தாலிகட்டிய லாரி ஓட்டுநர் கைது

கோவையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த உறவினர் மற்றும் அவரை கடத்திச்சென்று 2-வது திருமணம் செய்த லாரி ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். கோவை சரவணம்பட்டி...

முதல்வர் பழனிசாமி வீட்டின் முன் அதிமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!

முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு முன்பு, செட்டியப்பட்டி அதிமுக கிளை செயலாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் செட்டியப்பட்டி அதிமுக கிளை செயலாளராக...

“ரஜினி அரசியலுக்கு வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்; வராவிட்டாலும் ஏற்றுக்கொள்வோம்” : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரஜினியின் எந்த நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு தான்...
Do NOT follow this link or you will be banned from the site!