Home அரசியல் நன்னடத்தை விதி முறைகளை காட்டி வெளியே வருகிறார் சசிகலா? - கிலியில் அ.தி.மு.க அமைச்சர்கள்!

நன்னடத்தை விதி முறைகளை காட்டி வெளியே வருகிறார் சசிகலா? – கிலியில் அ.தி.மு.க அமைச்சர்கள்!

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா விரைவில் விடுதலை ஆக உள்ளதாக அ.ம.மு.க-வினர் கூறி வருகின்றனர். அவரை எதிர்கொள்ள, வரவேற்க இப்போதே அ.தி.மு.க அமைச்சர்கள் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நன்னடத்தை விதி முறைகளை காட்டி வெளியே வருகிறார் சசிகலா? - கிலியில் அ.தி.மு.க அமைச்சர்கள்!

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா விரைவில் விடுதலை ஆக உள்ளதாக அ.ம.மு.க-வினர் கூறி வருகின்றனர். அவரை எதிர்கொள்ள, வரவேற்க இப்போதே அ.தி.மு.க அமைச்சர்கள் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

sasikala

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதில், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார். மற்ற மூன்று பேரும் மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். விடுமுறை நாட்கள், நன்னநடத்தை உள்ளிட்ட விஷயங்களை காரணம் காட்டி சசிகலா விரைவில் விடுதலை ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

sasikala

சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் திருமணம் மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சசிகலா பரோல் விண்ணப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே சசிகலா விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக அ.ம.மு.க-வினர் கூறி வருகின்றனர். இதனால்தான் அ.தி.மு.க அமைச்சர்கள் சசிகலா பற்றி பவ்யமாக பேச ஆரம்பித்துள்ளார்கள் என்றும் காரணம் கூறுகின்றனர்.

natarajan

தன்னுடைய கணவர் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சசிகலா பரோலில் முதன்முறையாக வெளியே வந்தார். அதன்பிறகு, நடராஜன் இறந்தபோது 15 நாள் பரோலில் வந்தார். ஆனால், 9ம் நாளே சிறைக்குத் திரும்பினார். சிறை அதிகாரிகளை சரிகட்டி அங்கு சௌகரியமாக வாழ்ந்து வருகிறார் சசிகலா. ஷாப்பிங் சென்றது எல்லாம் மறைக்கப்பட்டு வருகிறது. அத்தகைய அதிகாரிகளை வைத்து சசிகலாவுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை பெற்றுத்தரத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நன்னடத்தை விதி முறைகளை காட்டி வெளியே வருகிறார் சசிகலா? - கிலியில் அ.தி.மு.க அமைச்சர்கள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி” – மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா உறுதி!

கோவை கோவை மாநகராட்சியை கொரோனா இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதே தனது முதல் இலக்கு என்று, புதிய ஆணையராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்தார்.

எடப்பாடி கொடுத்த திடீர் பரிசு ; திக்குமுக்காடிப் போன எம்எல்ஏக்கள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி பெற்றாலும் 65 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் எதிர்க்கட்சித் தலைவரானார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ. பன்னீர்செல்வமும் இப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர்...

‘சசிகலாவுடன் உரையாடினால் கட்சியில் இருந்து நீக்கம்’ – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்!

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை அதிமுகவில் இருந்து நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, புகழுக்கு இழுக்கும் அவப்பெயரும்...

சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது.. அடி வாங்கிய அதானி குழும நிறுவன பங்குகள் விலை

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது. நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட், 3 வெளிநாட்டு போர்ட்போலியோ...
- Advertisment -
TopTamilNews