Home சினிமா நண்பனே எனது உயிர் நண்பனே...இளையராஜா குறித்து பேசும்போது கதறியழுத எஸ்.பி.பி!

நண்பனே எனது உயிர் நண்பனே…இளையராஜா குறித்து பேசும்போது கதறியழுத எஸ்.பி.பி!

’இளையராஜா மாதிரி இசையமைக்க ஆளே இல்லை. அவருக்கு எத்தனை முறை தேசிய விருதுகள் கொடுத்தாலும் தகும்’ என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: ‘இளையராஜா மாதிரி இசையமைக்க ஆளே இல்லை. அவருக்கு எத்தனை முறை தேசிய விருதுகள் கொடுத்தாலும் தகும்’ என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

50 வருட நட்பின் அடையாளம்:

ialiyaraja ttn

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும், இசைஞானி இளையராஜாவிற்குமான நட்பு 50 வருடங்களைக் கடந்தது. எஸ்.பி.பி. தமிழ்த் திரையுலகில் பாட வந்தது முதலே இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களுடன் மிக நெருங்கிய நட்பிலிருந்து வந்தார். என்ன தான் இடைப்பட்ட காலத்தில் இசை நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டாலும்,  அவர்களுக்கு இடையேயான நட்பும், அன்பும் இன்னும் அவர்களுக்குள் இருக்கிறது என்பதை தான் இந்த செய்தி உறுதி செய்கிறது. 

எஸ்.பி. பி. க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா 

ilaiyaraja ttn

கடந்த 2017 ஆம் ஆண்டு, இளையராஜா சார்பில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு வக்கீல்  நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில், ‘இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்த செய்தியானது திரையுலகினர் மட்டுமல்ல, அவரது ரசிகர்களின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாடா… போடா…’என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு உரிமை

ilaiyaraja spb ttn

இந்த சம்பவத்துக்கு பிறகு, இளையராஜா பாடலை இனி மேடைகளில் பாட போவதில்லை என்று எஸ்.பி.பி.அறிவித்தார். ஆனாலும் நெடுங்காலமாக நண்பர்களாக இருந்த இவர்களின் நட்பில் ஒரு பெரிய விரிசல் விழுந்ததாகவே பார்க்கப்பட்டது.  ‘வாடா… போடா…’ என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு உரிமை கொண்டிருந்த இவர்கள் அந்த அமெரிக்க நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் பேசிக்கொண்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை. 

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்…

spb ttn

இந்நிலையில்,  தனியார் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்து கொண்டார்.அப்போது சிறுவன் ஒருவன், நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம்பெற்ற  ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்ற பாடினான்.  இதைக் கேட்ட  எஸ்.பி.பி.தன்னையும் மறந்து அழுதேவிட்டார்.இதனால் அந்த அரங்கிலிருந்த அனைவரும் ஒரு நிமிடம் உறைந்து போயினர்.

அவர் சம்திங் ஸ்பெஷல்இளையராஜா நீடூழி வாழவேண்டும்!

spb ttn

 

அப்போது பேசிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ‘ஒரு சம்திங் ஸ்பெஷல் இளையராஜாவிடம் எப்போதுமே உண்டு. அதைச் சொல்லாமல் போனால், பாராட்டாமல் இருந்தால், அதுவே ஒரு ஆதங்கமாகிவிடும். நோயாகிவிடும். நாம் நோயாளியாகிவிடுவோம். ’நினைவெல்லாம் நித்யா’ படத்தில் வந்த ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடலை இப்போதும் கேட்டிருப்பீர்கள். என்ன கம்போஸிங் கவனித்தீர்களா? ஒவ்வொரு வார்த்தைகளிலும் அப்படியொரு சங்கதியை, சின்னசின்ன சங்கதியைப் போட்டிருப்பார். ஒவ்வொரு இசைக்கருவியின் நுணுக்கங்களை அழகாகக் கையாண்டிருப்பார். இப்படியொரு இசையை இளையராஜாவைத் தவிர, வேறு யாராவது கம்போஸ் செய்திருக்கிறார் என்று நீங்களே சொல்லுங்கள்.. அவையெல்லாம் இளையராஜாவுக்கு மட்டுமே தனி ஸ்பெஷல். இதையெல்லாம் பார்க்கும் போது, இளையராஜாவுக்கு எத்தனை முறை தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும் என யோசித்துப் பாருங்கள். இளையராஜா, இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும். இன்னும் இன்னும் பல இசைகளைத் தரவேண்டும். இளையராஜா நீடூழி வாழவேண்டும்’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

spb ilaiyaraja ttn

எது எப்படியிருந்தாலும் இசையால், இசைக்காக வளர்ந்த நண்பர்கள், அதே இசையின் காரணமாகவே தங்களுக்குள் மோதிக் கொண்டு விலகி நிற்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இவர்கள் ஒன்றாக இணையும் நாளையே இவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை  மட்டும் சொல்ல ஆசைப்படுகிறோம்..!
 

மாவட்ட செய்திகள்

Most Popular

கருணாஸ் யாத்திரை தடுத்து நிறுத்தம்… போலீசார் தம்மை கேவலப்படுத்துவதாக புகார்…

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் யாத்திரை சென்ற எம்எல்ஏ கருணாஸை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை தலைவர்...

“கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குங்கள்” – அதிமுகவுக்கு, பிரேமலதா வலியுறுத்தல்

கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டுமென அதிமுகவுக்கு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்லையொட்டி, அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி...

நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்; என்னை கேள்வி கேட்டால் மிதித்துவிடுவேன்.. கடுமை காட்டிய சீமான்

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி தான் வேட்பாளர்கள் பட்டியலை முதலில் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக மதுரை ஒத்தக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில்...

குடியரசு தின முன்னெச்சரிக்கை – போலீஸ் பாதுகாப்பில் பாம்பன் பாலம்!

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் குடியரசு தினத்தன்று பெட்ரோல் நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்படுகின்றன.
Do NOT follow this link or you will be banned from the site!