நடை சாத்திய பிறகு கருவறையில் ஊஞ்சலாடிய பத்ரகாளியம்மன்! வைரலாகும் வீடியோ

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோவிலில் நடை சாத்தப்பட்ட பின்னர் கருவறையிலிருந்து ஊஞ்சல் ஆடுவது போன்ற சத்தம் கேட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோவிலில் நடை சாத்தப்பட்ட பின்னர் கருவறையிலிருந்து ஊஞ்சல் ஆடுவது போன்ற சத்தம் கேட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

கார்த்திகை தீபத்தன்று அந்தியூரிலுள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் வழிபாடு முடிந்து இரவில் நடையை சாத்திவிட்டு பூசாரி வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அதன்பின் கருவறையிலிருந்து ஊஞ்சலாடும் சத்தம் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து கோயில் செயல் அலுவலர் சரவணன் அன்றைய தினம் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது அதில், கருவறை முன்பு உள்ள திரையில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்று பதிவாகி இருந்தது. சுமார் 2 மணி நேரம் இந்த காட்சி தெரிவதாகவும், இது அம்மன் ஊஞ்சல் உற்சவ காட்சி போல் இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். 

Most Popular

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

திருப்பதியில் சுமார் 7,000 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6...

இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி!

இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இலங்கையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 71 சதவிகித வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு நடந்த...

ஆகஸ்ட் 12 முதல் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு...

30 வீடுகள்… கோடிக்கணக்கில் பணம்… 300 ஏக்கர் நிலம்!- 5 லட்சம் கொடுக்க மறுத்த உயர்கல்வி இயக்குநரை கொன்ற மகன்

30-க்கும் மேற்பட்ட வீடுகள், கோடிக்கணக்கில் பணம், 300 ஏக்கர் நிலம் இருந்தும் மருந்து கடை வைக்க 5 லட்சம் கேட்ட மகனுக்கு கொடுக்க மறுத்ததால் தந்தை கொலை செய்யப்பட்டார். இந்த வேதனையாக சம்பவம்...