Home தமிழகம் நடுரோட்டில் போலீஸ்காரர் செய்த வேலை... வாகனங்களை நிறுத்தி வாழ்த்து சொன்ன பொதுமக்கள்!

நடுரோட்டில் போலீஸ்காரர் செய்த வேலை… வாகனங்களை நிறுத்தி வாழ்த்து சொன்ன பொதுமக்கள்!

சட்டங்களைப் போடுவதாலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதாலும் மட்டுமே மக்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய முடியாது. என்ன தான் சட்டம் கைகளில் இருந்தாலும் கொஞ்சம் அக்கறையும் கூடவே மனிதாபிமானமும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் சென்னை போலீசார். ஹெல்மெட் அணியாதவர்களை நாடு முழுவதும் வளைத்து வளைத்து பைன் போட்டுத் தள்ளும் காவலர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தாலும், நிஜமாகவே மக்களின் காவலர்களாகவும் காலரை உயர்த்தி செல்கிறார்கள் சில கண்ணியமான காவலர்கள்.

சட்டங்களைப் போடுவதாலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதாலும் மட்டுமே மக்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய முடியாது. என்ன தான் சட்டம் கைகளில் இருந்தாலும் கொஞ்சம் அக்கறையும் கூடவே மனிதாபிமானமும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள் சென்னை போலீசார். ஹெல்மெட் அணியாதவர்களை நாடு முழுவதும் வளைத்து வளைத்து பைன் போட்டுத் தள்ளும் காவலர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தாலும், நிஜமாகவே மக்களின் காவலர்களாகவும் காலரை உயர்த்தி செல்கிறார்கள் சில கண்ணியமான காவலர்கள்.

traffic police

மழைக்காலம் துவங்கி விட்டதால், சென்னை நகர் முழுக்கவே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதைத் தடுத்து மக்களைக் காக்கும் விதமாக அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை சார்பில், நகரின் பல பகுதிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாமை நடத்தி வருகிறது. நேற்று காலை சென்னை மூலக்கடை மேம்பாலத்துக்குக் கீழே அப்படியொரு முகாம் நடந்து கொண்டிருந்தது. லேட்டா போனா அரைநாள் சம்பளம் கட் என்கிற எழுதப்படாத விதியை நொந்துக் கொண்டு, ‘நமக்கெல்லாம் அயர்ன் பாடி… டெங்குவெல்லாம் எட்டிப் பார்க்காது’ என்கிற நம்பிக்கையில் ரோட்டோரம் நடந்துக் கொண்டிருந்த முகாமை யாருமே எட்டிப் பார்க்கவில்லை. 

nilavembhu

சிக்னலில் போக்குவரத்தைச் சரி செய்துக் கொண்டிருந்த மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பொதுமக்கள் எல்லோருமே நிலவேம்பு கஷாயத்தைக் கண்டுக் கொள்ளாமல் செல்வதைக் கவனித்தார். உடனடியாக நூதனமான வழி ஒன்றை முயற்சித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், செல்வராஜ் ஆகியோரோடு ஆலோசித்து, அந்த பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை மடக்கிப் பிடித்து, ஆளுக்கு ஒரு கிளாஸ் நிலவேம்பு கஷாயத்தைக் குடிக்கச் சொல்லி ஃபைன் போட்டார். போலீஸின் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு கைமேல் பலன். ஹெல்மெட் அணிந்து வந்தவர்களும் அக்கறையாய் அருகே சென்று ஒரு கிளாஸ் கஷாயத்தை உள்ளே தள்ளினார்கள். குடித்து முடித்து போலீசாருக்கு சல்யூட் வைத்து பாராட்டுக்களைத் தெரிவித்தது அத்தனை அழகு!

மாவட்ட செய்திகள்

Most Popular

இன்டர்வியூ வைத்து வேட்பாளர்களை செலக்ட் செய்யும் ஸ்டாலின்… சில கன்டிஷன்களோடு!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த உடனே அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று கூறப்பட்டது. கூறியதை விட உக்கிரமாகவே இருபெரும் கட்சிகளான அதிமுக, திமுக களத்தில் இறங்கி வேலை பார்க்கிறார்கள். நிமிடத்திற்கு...

“வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கண்துடைப்புக்கான அறிவிப்பா?” : டிடிவி தினகரன்

வன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காக தான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கவுதம நதியில் தீர்த்தவாரி கண்டருளிய அருணாச்சலேஸ்வரர்… திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

திருவண்ணாமலை மாசி மகத்தையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கவுதம நதியில் அருணாச்சலேஸ்ரர் சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்...

சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே எஞ்சியிருக்கிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அதிரடியாக களத்தில் இறங்கியிருக்கின்றன. அந்த...
TopTamilNews