நடுரோட்டில் தீக்குளித்த கல்லூரி மாணவி!   அதிகாலையில் பரபரப்பு!

தமிழகத்தில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது சமீப காலங்களாய் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஐஐடி கல்லூரி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் பாத்திமாவின் தற்கொலை விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலையில் கோவையில் ஒரு கல்லூரி மாணவி நடுரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது சமீப காலங்களாய் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஐஐடி கல்லூரி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் பாத்திமாவின் தற்கொலை விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலையில் கோவையில் ஒரு கல்லூரி மாணவி நடுரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

fire

தஞ்சை, பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சினேகா (19). சினோகா கோவை பீளமேட்டில் தனது தோழிகளுடன் தனியாக அறை எடுத்து தங்கியிருந்து, அந்த பகுதியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை 5  மணியளவில் அறையை விட்டு வெளியேறிய சினேகா, கோவை அவினாசி ரோட்டுக்கு சென்று, தான் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அதிகாலை நேரம் என்பதால் அந்த நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததால், மாணவி சினேகாவின் உடலில் உடனே தீ மளமளவென பற்றி எரிந்து உடல் முழுவதும் பரவியது. பின்னர் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். நடுரோட்டில் மாணவி ஒருவர் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பதை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சினேகாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சினேகாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மாணவி சினேகா தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து பீளமேடு போலீசார் கோவை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Most Popular

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...