Home சினிமா நடிகை குஷ்பு வீட்டு வாசலின் முன் CAA & NRC-க்கு எதிராக போடப்பட்ட கோலம்!

நடிகை குஷ்பு வீட்டு வாசலின் முன் CAA & NRC-க்கு எதிராக போடப்பட்ட கோலம்!

கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆண்  பெண் என 8 பேர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிற்று கிழமையன்று  சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவிகள் கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ttn

குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எழுத்துக்களுடன் அங்குள்ள வீடுகள் மற்றும் சாலையில் கோலம் போட்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர்.  அனுமதியின்றி கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆண்  பெண் என 8 பேர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு பலரும்  எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை  அரசின் அராஜகத்தை எதிர்த்து, வேண்டாம் CAA, NRC என கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை  பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு  வீட்டு  வாசலிலும் கோலம் போடப்பட்டுள்ளது. இதை குஷ்பு  தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  முன்னதாக முக தலைவர் மு.க ஸ்டாலின், கனிமொழி,  திருமாவளவன்   உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் கோலம் போடப்பட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் பரவலாக பலத்த மழை !

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து...

கோழிப்பண்ணையில் தீ விபத்து : தீயில் கருகிய கோழிகள்!

பொன்னேரி பகுதியில் கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மெதூர்...

’கொளுத்தி போடுவதில் சுரேஷே பொறாமை படும் ஆள் இவர்தான்’- பிக்பாஸ் 15-ம் நாள்

சுயமுகத்தைக் காட்ட தயங்கிக்கொண்டிருந்தவர்களை உசுப்பேத்த டபுள் மடங்காகக் கொட்டியதும், ஆரியிடம் ஒட்டுமொத்த வீட்டுக்கும் பிடிக்காத ஒரு குணம் எவிக்‌ஷனில் வெளிப்பட்டதும் கொசுறாகச் சின்ன சண்டையுமாகச் சென்றது பிக்பாஸ் 15 –ம்...

பா.ஜ.க. நடத்திய மவுன போராட்ட நாடகத்தின் பின்னால் உள்ள தேவை குறித்து எனக்கு புரியவில்லை.. திக்விஜய சிங்

மத்திய பிரதேசத்தில் கமல் நாத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் மவுன போராட்டம் நடத்தியது குறித்து திக்விஜய சிங் கூறுகையில், இந்த போராட்ட நாடகத்தின் பின்னால் உள்ள தேவை குறித்து எனக்கு புரியவில்லை...
Do NOT follow this link or you will be banned from the site!