Home தமிழகம் நடிகர் விஜய் அரசியல் பிரவேசம்: பயப்படுகிறதா அதிமுக?

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம்: பயப்படுகிறதா அதிமுக?

விஜய்-யை பார்த்துப் பயப்படும் அளவில் அதிமுக இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: விஜய்-யை பார்த்துப் பயப்படும் அளவில் அதிமுக இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தயாராகியுள்ளது சர்கார் திரைப்படம். நடிகர் விஜய் நடித்துள்ள  இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன். எல்லாம் அரசியலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைத்துவிட்டுத் தேர்தலில் நிற்க போகிறோம்  என்று கூறினார்.

mafapandiyarajan

இந்நிலையில் சென்னை அடையாரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம், விஜயின் அரசியல் பேச்சு குறித்து கேட்கப்பட்டபோது, ‘புதிய வரவுகளுக்கெல்லாம் அச்சப்படும் நிலையில் அதிமுக இல்லை. அரசியலுக்கு வருவதற்கு விஜய்க்கு உரிமை உள்ளது. ஆனால் அவரைப் பார்த்து அதிமுகவிற்கு பயம் கிடையாது’ என்று அதிரடியாகக் குறிப்பிட்டார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“அரசியலுக்கு வரலன்னா தற்கொலை பண்ணிக்குவேன்” : ரஜினிக்கு மிரட்டல் விடுத்த மக்கள் மன்ற நிர்வாகி!

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகி மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!

வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20%...

காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் ‘கமல் பட நாயகி’!

காங்கிரஸிலிருந்து விலகிய பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்ட்கர் சிவசேனா கட்சியில் இணைந்தார். பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா...

வேளாண் சட்டங்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தஞ்சை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Do NOT follow this link or you will be banned from the site!