நடிகர் விக்ரமுடன் கூட்டணி சேரும் இர்ஃபான் பதான் : ஒப்புக்கொண்டதன் காரணம் இதுதானாம்!

இயக்குநர் அஜய் ஞானமுத்து என்வீட்டிற்கு வந்து என்னிடம் கதை சொன்னார். அப்போது நான் ஏன்  நடிக்கணும் என்று கேட்டேன்

நடிகர் விக்ரமின் 58-வது படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் விக்ரம் நடிக்கும் 58-வது படத்தை  இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இவர் ஏற்கனவே டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர்.  

vikram58

இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.  இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

irfan

இந்நிலையில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில்  உருவாகவுள்ள இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள இர்ஃபான் பதான், ‘நான் சில ரியாலிட்டி ஷோக்களில் பங்குகொண்டுள்ளேன்.ஆனால்  சினிமாவுக்கு நான் புதுசு. இயக்குநர் அஜய் ஞானமுத்து என்வீட்டிற்கு வந்து என்னிடம் கதை சொன்னார். அப்போது நான் ஏன்  நடிக்கணும் என்று கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்று கூறினார். உடனே ஓகே சொல்லிவிட்டேன். விக்ரமுடன் நடிப்பது பெருமையான விஷயம். அவர் சிறந்த நடிகர். ஷூட்டிங்கில்  சில ரீடேக்குகள் வாங்குவேன் என்று நினைக்கிறேன்’ என்றார். 

முன்னதாக நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...

இலவசமாக கொரோனா தடுப்பூசி… அமெரிக்காவின் அதிரடி

கொரோனா நோய்த் தொற்றால் உலகம் கடந்த 9 மாதங்களாக படாத பாடு பட்டு வருகிறது. அதிலிருந்து மீளமுடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. உலகே வியக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவில் இன்றைய தேதியில் கொரோனாவால்...
Do NOT follow this link or you will be banned from the site!