Home சினிமா நடிகர் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்?

நடிகர் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்?

அசுரன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது

தனுஷின் அசுரன் படத்தில்  இளைய சூப்பர் ஸ்டார் என பட்டப்பெயர் வழங்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. 

 வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணி மீண்டும் அசுரன் படம் மூலம் இணைந்துள்ளது.  கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை  மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம்  தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

asuran

இந்நிலையில் அசுரன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் டைட்டில்  கார்டில்   தனுஷிற்கு இளைய சூப்பர் ஸ்டார் என்று பட்டம்  வழங்கப்பட்டுள்ளதாக இணையத்தில் வீடியோக்கள் வெளியாகின. ஆனால் உண்மையில் தனுஷுக்கு அப்படி எந்த பட்டமும்  குறிப்பிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

dhanush

முன்னதாக அசுரன்  படத்துக்குப் பேனர் வைக்க வேண்டாம் என்று அகில இந்திய தனுஷ் தலைமை நற்பணி  மன்றம்  சார்பில்  வெளியிடப்பட்ட அறிக்கையில்  தனுஷ் பெயருக்கு முன்பாக  இளைய சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு இருந்தது கவனிக்கத்தக்கது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 47-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

தோஷங்களை போக்கும் பிரதோஷத்தில் சோமசூக்த பிரதட்சணம்!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்....

புத்தகத்தில் உள்ளதை திருமா மேற்கோள் காட்டினார்; அவரே சொன்னதுபோல் பாஜக அரசியல் செய்கிறது- கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “குஷ்பு முன்னாள் நடிகை என்பதனால் அவரது கைதை...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! சமூக வலைதளத்தில் உலாவரும் ரஜினியின் கடிதம்…

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...
Do NOT follow this link or you will be banned from the site!