Home சினிமா நடிகர் சேத்தன்: எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராகவே இருக்க விரும்புகிறேன்!

நடிகர் சேத்தன்: எந்த வட்டத்திலும் சிக்காத நடிகராகவே இருக்க விரும்புகிறேன்!

மர்மதேசம் தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சேத்தன்.பின்பு படிப்படியாக வளர்ந்து ‘தாம் தூம்’ படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னடம் என்று 50 படங்கள் முடித்துவிட்டார். இருப்பினும் அவருக்குள் ஓர் ஏக்கம் உள்ளது. அவரை ஒரு வட்டத்தில் அடக்க நினைக்கிறது திரையுலகம் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

மர்மதேசம் தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சேத்தன்.பின்பு படிப்படியாக வளர்ந்து ‘தாம் தூம்’ படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ,கன்னடம் என்று 50 படங்கள் முடித்துவிட்டார். இருப்பினும் அவருக்குள் ஓர் ஏக்கம் உள்ளது. அவரை ஒரு வட்டத்தில் அடக்க நினைக்கிறது திரையுலகம் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

chetan

இதைக்குறித்து அவர் பேசுகையில் ‘நான் டிவியில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்த போது என்னை வலைவீசித் தேடி வாய்ப்பு கொடுத்தவர் ஜீவா தான். அந்தப் படம் ‘தாம் தூம்’ . அதில் கதாநாயகனின் மாமா பாத்திரம். அப்போது என் டைமிங் முக பாவனைகளைப் பார்த்து உங்களுக்கு காமெடி நல்லா வரும் போல இருக்கே? என்றார். ஆமாம் சார் அப்புறம் ஏன் சார் என்னை சீரியசாக் காட்ட முயற்சி செய்கிறீர்கள் என்றேன். அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ‘மர்மதேசம்’ தொடர் செய்து வச்சிருக்கு வேலை இது. என்றார். அந்தளவுக்கு ‘மர்மதேசம்’ தொடர் தாக்கத்தை ற்படுத்தி இருந்தது. அடிப்படையில் எனக்கு  நகைச்சுவையுணர்வு அதிகம்  உண்டு. ஆனால்  சொன்னால் யாரும் இதை நம்ப மாட்டேன் என்கிறார்கள்.

chetan family

நான் முதலில் ஒப்பந்தமான படம் ‘தாம் தூம்’ என்றாலும் முதலில் வெளியான படம்’ பொல்லாதவன்’. அதன் பிறகு நிறைய படங்கள். நான் நடித்தவற்றில் குறிப்பிட்டுப் பெருமைப்பட வைத்த படம் Revelations. இது நான் நடித்து 2016 ல் வெளிவந்தது.இந்தப் படம் மும்பை, கல்கத்தா, புனே என்று பல வெளியூர்களில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளைப்  பெற்று நான் மகிழ்ந்த திரைப்படம் என்பேன். கடைசியாக வந்த படம் ‘தமிழ்ப்படம் 2 அதே இயக்குநர் சி.எஸ்.அமுதனின் இரண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர்.

எனக்கு பாசிடிவ் நெகடிவ் காமெடி என எல்லா கேரக்டரும் செய்ய ஆசை. எந்த ஒரு வட்டத்திலும் சிக்கிக் கொள்ள விருப்பம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கு நாசர் சார் தான் முன்னோடி. அவர் எல்லாமும் ஏற்று நடிப்பார். எந்த வட்டத்திலும் சிக்காததால்தான்  அவரால் காலம் கடந்து நிற்க முடிகிறது. நானும் அவர் வழியில் செல்ல விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஓடிப்போன கணவன் -தேடிப்போன மனைவி -கேடித்தனம் செஞ்ச மந்திரவாதி

ஒரு பெண்ணின் காணாமல் போன கணவனை தேடி கொடுப்பதாக கூறி அவரை பலாத்காரம் செய்த  ஒரு மந்திரவாதியால் அந்த பெண் தற்கொலை  முயற்சி...

கிருஷ்ணசாமி கட்சிக்கு ‘அந்த’ சின்னத்த ஒதுக்குங்க – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழகத்தில்...

‘பண நெருக்கடி’ அமமுகவை கலைக்கும் தினகரன்?!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தினகரன் கலைக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சசிகலா அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தது தினகரனுக்கு பேரதிர்ச்சியாம். அமமுக...

“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்!

பெரிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக ஒருவழியாக முடித்துவிட்டது. தற்போது சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சிறிய கட்சிகளைப் பொறுத்தவரை பெரிதாகப் பேரம் பேசாமல் கொடுக்கும் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே...
TopTamilNews