Home சினிமா நடிகர் சதீஷின் ஏமாற்றுவேலையை ஆதாரத்துடன் வெளியிட்ட நடிகர் ஆர்யா: ஷாக்கான ரசிகர்கள்!

நடிகர் சதீஷின் ஏமாற்றுவேலையை ஆதாரத்துடன் வெளியிட்ட நடிகர் ஆர்யா: ஷாக்கான ரசிகர்கள்!

நடிகர் சதீஸ் பதிவிட்ட வீடியோவுக்கு பதில் சொல்லும் வகையில் நடிகர் ஆர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார்

காமெடி  நடிகர் சதீஸ் செய்த ஏமாற்று வேலையை நடிகர் ஆர்யா வீடியோ  ஒன்று வெளியிட்டு உண்மையை உடைத்துள்ளார். 

aarya

கலகலப்பான நடிகராக பலருக்கும் பரிச்சயமானவர் ஆர்யா. இவர் சக நடிகர்களுடன் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டி ரசிக்கும் ரசிக்கும் படியாகவே இருக்கும். அந்த வகையில் நடிகர் நகைச்சுவை நடிகர் சதீஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ  ஒன்றை பதிவிட்டார். அதில், தூரமாக நின்று கொண்டு குடுவையில் பேனாவை துல்லியமாக எறிந்து அசத்துகிறார்.  இதைக்கண்ட நெட்டிசன்கள் எப்படியா இது? நம்பமுடியலையே என்று கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்நிலையில் நடிகர் சதீஸ் பதிவிட்ட வீடியோவுக்கு பதில் சொல்லும் வகையில் நடிகர் ஆர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் குடுவையின் அருகிலிருந்த ஒருவர் அதற்குள் பேனாவை போடுகிறார். இதை மற்றொருவர் வீடியோவாக எடுக்கிறார்.

 

நடிகர் சதீஸின் கலாட்டாவை  ஆர்யா ஒருபக்கம் நின்று வீடியோ எடுத்துள்ளதுடன், பொய் எல்லாமே பொய் என்று கமெண்ட் அடிக்கிறார். இதைக்கண்ட சதீஸ் அய்யயோ மாட்டிகிட்டோமே என்று நினைத்து முகத்தை மூடிக்கொள்வது போல அந்த வீடியோ முடிகிறது.

 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews