Home சினிமா நடிகர் சங்க தேர்தல் தேவையற்றது: நடிகர் கார்த்தி கருத்து! 

நடிகர் சங்க தேர்தல் தேவையற்றது: நடிகர் கார்த்தி கருத்து! 

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் அணியை  எதிர்த்து பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி களம் காண்கிறது. தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் இரு அணிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது நாசர் அணி நாடக நடிகர்களிடையே வாக்கு சேகரிப்பதற்காக பல்வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அதில் ஒன்றான நேற்று சேலத்திற்கு சென்று பரப்புரை மேற்கொண்டனர். அப்போது அந்த அணியின் பொருளாளர் கார்த்தி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‘நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு உதவி செய்வதில் ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள். அதையெல்லாம் தாண்டி ஒரு விஷயத்தைச் செய்து முடிக்கும் போது, இங்குக் கிடைக்கும் அன்புதான் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது.முதலில் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். அந்தக் கட்டடத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான், இதுவரைக்கும் நாங்கள் ஆரம்பித்த எல்லா நலத்திட்டங்களையும் தொடர்ந்து செய்ய முடியும். ஒருமுறை ஆரம்பித்து, அப்படியே விட்டுவிட்டுப் போகும் விஷயமாக இது இருக்கக் கூடாது. 

nadigar

இந்த நடிகர் சங்கத் தேர்தல் என்பது எவ்வளவு பெரிய வீண் வேலை என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பேர் ஓட்டு கேட்டு ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறோம். கட்டடத்துக்கு வேலை செய்யாமல், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். இது அவசியமே இல்லாத ஒரு விஷயம்.

ஒரு சங்கத்துக்குள் சுலபமாகப் பேசிக்கொண்டு, அந்தச் சங்கத்தின் நலனுக்காகப் போராடுவோமா? நான் பெரிய ஆள், நான் ஜெயிச்சிக் காட்டுறேன் எனப் போராடுவோமா? இங்கு நம்முடைய உழைப்பு எதைச் நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பது தான் என்னுடைய கேள்வி. நியாயமாக இருந்தால் இந்தத் தேர்தலே நடக்கவே கூடாது. கட்டடம் கட்டி முடிக்கும் வரை எல்லோரும் சுமுகமாக இருந்து அந்த வேலையைப் தான் பார்த்திருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘500க்கும் கீழ் குறைந்தது கொரோனா பலி’ முழு விவரம் வெளியீடு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இருப்பினும் தீபாவளி...

‘பாஸான 70% பேர் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதியவர்கள்’: கல்வியாளர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான...

விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது. காஞ்சிபுரம் வெள்ளை...

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் ‘நூரி’ என்ற எட்டு வயது பெண் நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கிடந்தது .
Do NOT follow this link or you will be banned from the site!