Home சினிமா நடிகர் சங்க தலைவர் தேர்தல்: நாசர் அணிக்கு எதிராக களமிறங்கும் பாக்யராஜின் சங்கரதாஸ் சுவாமிகள் அணி!

நடிகர் சங்க தலைவர் தேர்தல்: நாசர் அணிக்கு எதிராக களமிறங்கும் பாக்யராஜின் சங்கரதாஸ் சுவாமிகள் அணி!

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட நடிகர் பாக்யராஜ் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட நடிகர் பாக்யராஜ் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்குகள் எண்ணப்பட்டுத் தேர்தல் முடிவும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோருடன், துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

ele

மற்றொரு பக்கம் அந்த அணியை எதிர்த்து நடிகர் பாக்யராஜின்  சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிட உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கலை இன்று சென்னை திநகர் பகுதியில் உள்ள நடிகர் சங்க கட்டிடத்தில் தாக்கல் செய்தார். 
 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews