Home சினிமா நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் அளித்த நடிகையின் நிலை என்ன தெரியுமா?

நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் அளித்த நடிகையின் நிலை என்ன தெரியுமா?

மீடூ புகாரின் எதிரொலியாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிக்கவிருந்த புதிய படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு: மீடூ புகாரின் எதிரொலியாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிக்கவிருந்த புதிய படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘நிபுணன்’ பட ஷூட்டிங்கின் போது நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டை  அர்ஜுன் மறுத்ததோடு 
தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாகப் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்திய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். 

sruthi

ஆனால் நடிகர் அர்ஜுன் மீதான குற்றச்சாட்டில் தான் உறுதியாக இருப்பதாகவும், சட்டப்படி போராடத் தயார் என்றும்  ஸ்ருதி ஹரிஹரன் கூறினார். இதன் தொடர்ச்சியாக ஸ்ருதி அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் நடிகர் அர்ஜுன் மீது 354ஏ, 509, 506, 354, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  

இந்நிலையில் ஸ்ருதி ஹரிஹரன், ‘தாரி தப்சிட்தான் தேவ்ரு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதை பி.எஸ். லிங்காதேவ்ரு இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் ஸ்ருதி இந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து  கூறியுள்ள  இயக்குநர் லிங்கதேவ்ரு, ‘இந்தப் படத்தின் ஷூட்டிங் 45 நாட்கள் நடக்க இருக்கிறது. ஸ்ருதி ஹரிஹரனின் கால்ஷீட் 30 நாட்கள் தேவை. ஆனால், அவர் ஜனவரி மாதத்திற்கு  பின் வர இயலாது என்று கூறிவிட்டார். அதோடு அர்ஜூன் மீது தொடுத்துள்ள வழக்கு காரணமாக அவர் நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டும் என்பதால் அவரைப் படத்தில் எங்களால் நடிக்க வைக்க முடியாது. இந்த விவகாரம் நான்கு சுவருக்குள் முடிந்திருக்க வேண்டும். பொதுவெளியில் வந்து ரசிகர்கள் மோதிகொண்டு மோசமாகிவிட்டது. அதனால்  வேறு ஹீரோயினைத்தான் தேட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மீடூ விவகாரத்தால் ஸ்ருதி  படவாய்ப்பை இழந்திருப்பது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்”

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே விருப்ப...

அதிமுகவிடம் 30க்கும் அதிகமான தொகுதிகளை கேட்டு தொல்லைக்கொடுக்கும் பாஜக!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், தமிழகத்தில் காலூன்ற திட்டமிட்டிருக்கும் தேசிய கட்சியான பாஜக...

நான் கேட்பேன்- னு சொன்னீங்களே! நீங்களுமா கமல் சார் இப்படி?

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கமல் உருவம் பதித்த டி- ஷர்ட்டுகள், டிபன் பாக்ஸ்களை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கணும்! செய்தியாளர்களை விலைக்குவாங்கிய ஓபிஎஸ் மகன்!!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இளைய மகன் ஜெயபிரதீப்க்கு தேனி பிரஸ் கிளப் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்களை விலைக்கு வாங்க நினைக்கும்...
TopTamilNews