Home விளையாட்டு நடிகர் அஜித்தை பின்பற்றும் கூல் தோனி! சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் வலம்வருகிறார்...

நடிகர் அஜித்தை பின்பற்றும் கூல் தோனி! சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் வலம்வருகிறார்…

மிஸ்டர் கூல் என செல்லமாக அழைக்கப்படும் தோனி, இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பு, இரயில்வே அணியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விளையாடும் போதெல்லாம் தோனி இறங்கினாலே சிக்ஸ், போர் என்று அடித்து வெளுப்பார். அதனால், இரயில்வே அணியினர் தோனியை ‘தீவிரவாதி’ என்று செல்லமாக அழைப்பார்கள். அதன்பின் 1999-2000 ஆண்டுகளில் ரஞ்சி கோப்பை போட்டியில் தோனி பீகார் அணிக்காக விளையாடினார். இந்திய  அணி தோல்வியின் விளிம்பில் இருந்தாலும், பதட்டப்படாமல் வெற்றியை நோக்கி நம்பிக்கையோடு சிரித்தப்படியே போராடுவது தோனியின் வழக்கம். போட்டியின் கடினமான சூழலிலும் அணியின் மற்ற வீரர்களையும் அமைதியாகச் செயல்படும் படி சொல்வது தான் தோனியின் ஸ்டைல். தோனியின் பலமே அவரது அமைதி தான். கிரிக்கெட்டில் மட்டும் கிங் கிடையாது… மகேந்திர சிங் தோனி  ஃபுட்-பால் விளையாட்டிலும் சிறந்த கோல் கீப்பராக இருந்திருக்கிறார். இது இரண்டையும் விட பேட்மிட்டன் விளையாட்டு தான் தோனிக்கு பிடிச்ச விளையாட்டு.

ms dhoni

இந்நிலையில்  நடிகர் அஜித் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் “சால்ட் அண்ட் பெப்பர்” ஹேர் ஸ்டைல் லுக்கிற்கு மாறியுள்ளார். இப்போது அந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் மகள் ஸிவா மற்றும் செல்ல நாயுடன் தோனி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. தோனியின் புதிய தோற்றம் அந்த வீடியோவில் ஒரு வினாடி மட்டுமே வரும் தோனி, அதிக வெள்ளை நிற தாடியுடன் காட்சி தருகிறார். இதனால் மிஸ்டர் கூல், தல அஜித்தின் ஸ்டைலுக்கு மாறியிருப்பதாகவும், லாக்டவுன் ஸ்பெஷல் ஹார் ஸ்டைலா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

இதுவரை 2099 கி.மீ., பயணம்.. 59,140 மக்களுடன் நேரில் சந்திப்பு

75 நாட்களில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 1,500 பிரச்சார கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரம் செய்வார்கள் என்று, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல்...

3வது புருசனுடன் ஊர் சுற்றிய இளம்பெண்: 2வது புருசனுக்கு வந்த ஆத்திரம்

ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த சுந்தரராஜின் மனைவி பத்மா. கணவனுடன் வாழ்ந்த கசக்கிறது என்று சொல்லிவிட்டு, சேலத்தை சேர்ந்த அன்பரசுவுடன் உறவு வைத்திருந்திருக்கிறார். அவ்வப்போது சென்று அன்பரசுவுடன் வாழ்ந்துவிட்டு வந்த பத்மா,...

4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. கடந்த...
Do NOT follow this link or you will be banned from the site!