Home தமிழகம் ‘நகரத்தில் வளர்ந்த ஸ்டாலினுக்கு கிராமங்களைத் தெரியாது’ - முதல்வர் பேச்சு

‘நகரத்தில் வளர்ந்த ஸ்டாலினுக்கு கிராமங்களைத் தெரியாது’ – முதல்வர் பேச்சு

திமுக தலைவர் ஸ்டாலின் நகரத்தில் வளர்ந்ததாகவும், அதனால் அவருக்கு கிராமங்களை தெரியாது என்றும் முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். 

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் நகரத்தில் வளர்ந்ததாகவும், அதனால் அவருக்கு கிராமங்களை தெரியாது என்றும் முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். 
 
மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். 

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவை பற்றி தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற இருந்தபோது உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் நீதிமன்றம் சென்று தடை வாங்கியதாகவும் குற்றஞ்சுமத்தினார்.

mk stalin

அதேபோல், நகரத்தில் பிறந்து வளர்ந்த ஸ்டாலினுக்கு, கிராமங்களைப் பற்றித் தெரியாது என விமர்சித்த முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது எந்த நன்மையையும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், அப்போது மு.க.ஸ்டாலின் மக்கள் குறைகளை தீர்த்திருந்தால் சிறந்த அரசியல்வாதி என்று கூறி இருக்க முடியும் என்றும் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews