Home தமிழகம் தொழில்துறையில் தொடர்ந்து முன்னேறும் தமிழகம்: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்

தொழில்துறையில் தொடர்ந்து முன்னேறும் தமிழகம்: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்

தொழில்துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னேறி வருகின்றது என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம் தெரிவித்துள்ளார்

தொழில்துறையில் தொடர்ந்து முன்னேறும் தமிழகம்: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்

கடலூர்: தொழில்துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னேறி வருகின்றது என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு அந்நிய முதலீ டுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது, கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான முதலீடுகளுக்கு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, அடுத்தாண்டு ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், கடலூரில் இன்று செய்தியாலர்காளிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னேறி வருகிறது என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி அளவில் முதலீடு பெறப்பட்டது. கோடிக்‌கணக்கில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க மூன்று முதல் 7 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில், ஐடிசி உள்ளிட்ட  68 தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே பணிகளை தொடங்கியுள்ளன. இதன்மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 27 வேலை வாய்ப்பு மற்றும் பல லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 27 ஆயிரத்து 953 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அன்னிய முதலீடாகவும், குஜராத் மாநிலத்தில் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் உள்நாட்டு முதலீடாவும் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகம் தொழில்துறையில் தொடர்ந்து முன்னேறவும், வளர்ச்சிப் பாதையில் புதிய இலக்குகளை அடையவும், வருகிற ஜனவரி மாதம் 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் வெற்றியடையும் எனவும் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கு செல்வதாக தெரிவித்த சம்பத், அதனை கொச்சைப்படுத்தும் விதமாக அமைச்சர்கள் சுற்றுலா செல்கிறார்கள் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூறிவருவதாகவும் குற்றம் சாட்டினார்.

தொழில்துறையில் தொடர்ந்து முன்னேறும் தமிழகம்: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

வெப்பச் சலனத்தால் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

தடுப்பூசி குறித்து முறையாக அறிவிக்காத அதிகாரிகள்… ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்!

ஈரோடு ஈரோடு வீரப்பன்சத்திரம் மையத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த முறையான அறிவிப்பு வெளியிடவில்லை என கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? – நீதிமன்றம் நாளை தீர்ப்பு!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்...

ஆத்தாடி.. தடுப்பூசியா? தலைதெறிக்க ஓடும் கிராம மக்கள்

தடுப்பூசி போட கிராமத்திற்கு வரும் டாக்டர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகளையும் பார்த்து ஓடி ஒளிந்துகொள்வதும், ஊருக்குள் விடாமல் அடித்து உதைத்து அனுப்பிய சம்பவங்களும் முன்பெல்லாம் நடந்துள்ளன. இப்போதும் அந்த சம்பவங்கள் நடக்கின்றன.
- Advertisment -
TopTamilNews