Home இந்தியா தொழிலதிபர்களின் தோழன் மோடி விவசாயிகளை வஞ்சிக்கிறார்: ராகுல் காந்தி

தொழிலதிபர்களின் தோழன் மோடி விவசாயிகளை வஞ்சிக்கிறார்: ராகுல் காந்தி

தொழிலதிபர்களின் தோழன் மோடி விவசாயிகளை வஞ்சிக்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அமேதி: தொழிலதிபர்களின் தோழன் மோடி விவசாயிகளை வஞ்சிக்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக தன்னுடைய தொகுதியான அமேதிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். மோடி குறித்து ராகுல், விவசாயிகள் எப்போதும் இல்லாத அளவு பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆனால் மோடியோ தன் தொழிலதிபர் நண்பர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறார். விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாமல் தொழிலதிபர்களுக்கு உதவுவதை கடமையாக கொண்டுள்ளார். ஹாலிடம் இருந்த ரபேல் விமான ஒப்பந்தத்தை தன் நண்பர் அம்பானியிடம் மாற்றிக் கொடுத்திருக்கிறார்.

அதேபோல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தை வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கொடுத்தார். ரபேல் ஊழல் சிபிஐக்கு வரும் என்ற அச்சத்தில்தான் அலோக் வர்மா நீக்கத்தில் ஆர்வம் காட்டினார் என ராகுல் கூறினார்.

மேலும் அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மோடி போல் அல்லாமல் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என்று தெரிவித்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“ரம்மி விளையாடி டம்மி ஆனேன் ” -ஆன்லைன் சீட்டுக்கட்டில் 30 லட்சம் இழந்த வாலிபர் பண்ண வேலை

ஆன் லைன் ரம்மி விளையாட்டில் 30 லட்ச ரூபாய் இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல ஆன்லைன் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் .

’50 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு’ விரைவில் மீளுமா இந்தியா!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் நாளொன்றுக்கு சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், பாதிப்பு...

திண்டுக்கல்- அரசு கல்லூரி அமைக்கக் கோரி ஆட்சியரிடம், பள்ளி மாணவர்கள் மனு

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி...

ஈரோடு- பெண் எஸ்.ஐ-க்கள் பாலியல் புகார் – “விசாரணை அறிக்கை டிஜிபிக்கு அனுப்பிவைப்பு”

ஈரோடு பெண் எஸ்.ஐ-க்கள் பாலியல் புகார் குறித்த விசாரணை அறிக்கை தொழில்நுட்ப பிரிவு டிஜிபி-க்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதாக, ஈரோடு மாவட்ட எஸ்.பி.தங்கதுரை தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்ட காவல்துறை...
Do NOT follow this link or you will be banned from the site!