Home இந்தியா தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்தது...

தொடர் ஏற்றத்தில் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்தது…

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. அமெரிக்கா-சீனா வர்ததகம் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியது, ஈரான்-அமெரிக்கா பதற்றம் தணிந்தது  போன்ற சர்வதேச நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது.

இன்போசிஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இன்போசிஸ், மாருதி, அல்ட்ராடெக்சிமெண்ட், கோடக்மகிந்திரா வங்கி மற்றும் ஏசியன்பெயிண்ட்ஸ் உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டஸ்இந்த் வங்கி மற்றும்  டைட்டன் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஐ.சி,ஐ.சி.ஐ. வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,428 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,127 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 174 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.67 லட்சம் கோடியாக உயர்ந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 147.37 புள்ளிகள் உயர்ந்து 41,599.72 நிறுவன பங்குகளின் விலை புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 40.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,256.80 புள்ளிகளில் நிலை கொண்டது.

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலாவின் தற்போதைய நிலை என்ன? – மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா சுய நினைவுடன் இருப்பதாகவும், அவரின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் அவர் நாளை...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் கலவரமாக மாறியது. டிராக்டர் பேரணியை போலீசார்...

எஸ்.பி.பி. கடைசியாக பாடிய ‘என்னோட பாஷா பாடல்…’ -எச்.ராஜா உருக்கம்

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது மத்திய அரசு. பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளில்...

கடன் தொல்லையால், மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கோயமுத்தூர் கோவையில் கடன் தொல்லை காரணமாக மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை...
Do NOT follow this link or you will be banned from the site!