தொடரும் கொடூரம்! 19 வயது இளம்பெண்ணை வன்கொடுமை செய்து எரித்த இளைஞர்!! 

பீகார் மாநிலத்தில் 19 வயது இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தில் 19 வயது இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானாவில் கடந்த சில நாட்களுக்கு முன், பெண் மருத்துவர் பிரியங்காவை கடத்தி, 4 பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து தீவைத்து கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபர்களே பெண்ணுக்கு தீவைத்த கொடூரம் நடந்தது. அந்த காயங்கள் மறைவதற்குள், பீகாரிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

fire

சாம்பரன் மாவட்டம் நர்கடியாகஞ்ச் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், அவரது தாயுடன் வயலில் வேலை செய்துகொண்டிருந்தார். வேலைக்கு இடையே சமையல் செய்வதற்காக  அந்த பெண்ணின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இளம்பெண் வயலில் தனியாக வேலை செய்துகொண்டிருந்ததை பார்த்த அப்பகுதியை சேர்ந்த அர்மான் என்ற இளைஞர், அப்பெண்ணை கரும்பு தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அர்மானிடமிருந்து தப்பிவந்த இளம்பெண், நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாய், என் பெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு அர்மானிடம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அர்மான், அவர்களது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 

Most Popular

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...

மூணாறு நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலி !

தென் மேற்கு பருவமழையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. அதன்படி கேரள மாநிலம் இடுக்கி...

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை...

வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தற்கொலை

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம்...